பக்கம் எண் :

பொருளணியியலுரை113

பூங்கமலக்கோயிலாள்புத்தமிர்தினுட்பிறந்தாள்
வீங்குதுணைமுலையாள்வெண்ணகையா-ளோங்குபுனற்
பொன்னிநடுவுட்பொருண்மார்பகத்தாளென்
சென்னிபிரியாத்திரு.
(120)

இது மகடூஉப் பொருட்டன்மை. இதனுள், பொன்னிநடுவுட் பொருள் என்ற திரண்டாற்றிடைக் கண்வளர்ந்த நம்பெருமாள். திணை - இதுவுமது. துறை - பெண்பாற்கடவுள்வாழ்த்து.

முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான்.
(121)

இஃது ஆடூஉ மக்கட்டன்மை. ஆவியை என்பது ஆவிக்கென இரண்டாவது நாலாவதாயிற்று. திணை - வாகை. துறை - தாபதவாகை ; என்னை? “பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம, லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே”, “மனத்தினை யொருவழி நிறுப்பது பொறையே”, “நிறுத்திய மனத்தினை நிலைதிரி யாமற், குறித்த பொருளொடு கொளுத்துத னினைவே” என்ற முறையே தொகைநிலை பொறைநிலை நினைத லென்னு மூன்று மிப்பாட்டினுள்ளே கூறினமையான் “அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும்” என்னுஞ்சூத்திரத்துள் ‘நாலிரு வழக்கிற் றாபதபக்கமு’ மென்னு மெட்டனுள் தவஞ்செய்து யோகம்பயில்வார்க்குரிய விம்மூன்றும் வந்தமையா லெனக்கொள்க.

கூரெயிற்றாருண்கண்ணார்கொம்மையிளமுலையார்
வார்புருவத்தார்திலகவாணுதலார் - காரகத்தெம்
மால்வரையாரெண்ணிறந்தமாதருணின்னாற்குறித்த
கோல்வளையாராரிறைவகூறு.
(122)

இது மகடூஉமக்கட்டன்மை. கூரெயிறு - கூரியபல். உண்கண் - மையுண்கண். கொம்மை - திரட்சி. இளமை - மேனிவனப்பு. வார் புருவம் - நீண்டபுருவம். கோல்வளை - திரண்டவளை. வாணுதல் - ஒளி பொருந்திய நுதல். பகுதி - சேட்படை. துறை - அறியாள்போன் றவனினைவுகேட்டல்.