பக்கம் எண் :

114மாறனலங்காரம்

வள்ளுகிருந்தோலடியுஞ்செவ்வாயும்வார்சிறைகூர்
புள்ளியுமென்சூட்டுமுறுபொற்பினதா--மொள்ளியரை
மாறிவருவாதியரைவென்றமகிழ்மாறனா
ரேறிவருவெள்ளோதிமம்.
(123)

இஃது உயிருளதா யியங்கு மஃறிணைத்தன்மை. வள் - கூர்மை. தோலடி - என்பில்லாத அடி. புள்ளி - பொறி. திணை - பாடாண் பொதுவியல். துறை - அன்னவாழ்த்து. என்னை? பாலறிமரபிற் பொருநர் கண்ணும் வாகைத்திணையுட்கூறிய சூத்திரம்போல வென்றி கூறாது அன்னத்தினது தன்மைகூறியதனாலும் வாழ்த்தெல்லாம் பாடாணாதலாலு முணர்க.

பரியரைத்தாய்த்திணிவயிரம்பயின்றுநிலங்கிளைமுதற்றாய்
விரிசினைத்தாய்ப்பசுந்தழைத்தாய்விரைமலர்த்தாய்விழைகனித்தாய்ப்
பெரியகதிரவன்மறைந்தபிழம்பிருட்குமுறங்காது
வரிவளையூர்புனற்குருகூர்மகிழ்மாறர்திருப்புளியே.
(124)

இஃது உயிருளதாகி யியங்கா வஃறிணைத்தன்மை. இவையிரண்டுங் கடவுட்டன்மையுடைத்தாயினு முலகின்கட்டோன்றும் வடிவ மஃறிணைத் தன்மையவாதலி னிங்ஙனம் கூறுவதாயிற்று. திணை - இதுவுமது. துறை - தாவரவாழ்த்து. பா - தரவுகொச்சகக்கலிப்பா. இருள் - ஆகுபெயர்.

ஆதாரபீடத்தமர்ந்துயர்ந்தபாதசெடி
மீதாயழுந்தமிதித்துநிமிர்தாட்டுணைத்தாய்த்
தாழ்ந்ததுதிக்கையினைத்தாவியிருகைபற்ற
வாழ்ந்தபகுவாயகத்தோங்குநாவின்
வளையெயிற்றுக்கூர்ங்கோட்டுவான்பிடர்வீழ்கற்றை
யுளைவனப்பிற்பாங்கருயர்செவித்தாயொண்கருக்கி
னூழொன்றியசீர்த்தொடூற்றமுறுமாளியின்மே
லாழங்குடைத்தாயதன்மேற்கொளாளியதாய்
நான்றதலைப்போதிகைத்தாநாவீறர்வண்புளிக்கீழ்த்
தோன்றுதிருக்காவணக்கற்றூண்.
(125)