இஃது உயிரிலஃறிணைத்தன்மை. இது பத்தடியான்வந்த பஃறொடை வெண்பா. திணை - இதுவுமது. துறை - மதலைவாழ்த்து. நீண்டசெவியுறவினீள்புருவத்திம்பரொளி கூண்டுபயநோக்கமுங்கைக்கொண்டதாம்--பாண்டவர்தந் தேர்ப்பாகனானசிறுபுலியூரானுலகங் காப்பான்றன்மால்வரையாள்கண். | (126) |
இது சினைத்தன்மை. உபயநோக்கம் - அருணோக்கமு மருணோக்க மும். பகுதி - சேட்படை. துறை - கண்ணயப்புரைத்தல். கைச்சிரத்தானுந்து திப்பக்கன்றினராகந்திறந்து பச்சிரத்தமுண்டுயிருண்பான்மைத்தே--வச்சிரத்தாற் குன்றெறிந்தானும்பரவுங்கோயிலான்பாரதப்போர்க் கன்றெறிந்தவன்சக்கரம். | (127) |
இது வினைத்தன்மை. ஆகம் - மார்பு. திறத்தல் - பிளத்தல். பச்சிரத்தம் - குளிர்ந்த ரத்தம். அன்று - முற்காலத்து. குவ் வுருபு மயக்கம். திணை - வாகை. துறை - திகிரிவென்றி. பூரித்துடலம்புளகித்திடப்புலமை சீரித்துயிர்தளிர்ப்பச்சேர்ந்துருகும்--பாரித்த முத்தமிழ்மாறன்ஞானமுத்திரைக்கைகண்டுதொழு முத்தமராய்வாழ்வாருளம். | (128) |
இது பண்புத்தன்மை. பூரித்தல் - தடித்தல். புளகித்தல் - உரோமஞ் சிலிர்த்தல். புலமை - அறிவின்றன்மை. சீரித்தல் - இடைவிடாமற் பழகுதல். தளிர்த்தல் - தழைத்தல். சேர்ந்துருகுதல் - பரத்துவ சொரூபத்தை யோகித்துக் குழைதல். பாரித்தல் - விரித்துரைத்தல். முத்தமிழ் - சித் தசித் தீச்சுர மூன்றுங் கூறுந் தமிழ் ; அது திருவாய்மொழி. உளம் - ஆன்மஞானம். முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைத் திருக்கையைக் கண்ணினாற் கண்டுங் கையினாற் றொழுது முத்தமராய் வாழ்வாரது ஆன்மஞானமான துடலந் தடித் துரோமஞ் சிலிர்ப்பப் பரத்துவஞானத்தோடும் பயின்ற பரத்துவசொரூபத்தை யோகித்துக் குழையு மெனக் கூட்டுக. திணை - பாடாண். துறை - பழிச்சினர்ப் பரவல். |