பக்கம் எண் :

12பாயிரவுரை

கருதியமைக்கப்பட்ட தந்திரவுத்தியினது கூறுபாடுணர்த்தினென்றவாறு.

உள்ளியதுணர்த்தலென்பது சூத்திரத்திற் சொற்றசொற்குக் கூறிய வடைவே பொருளுணர்த்துவதன்றி யிதன்கருத் திஃதெனவுணர்த்தல். அஃதாவது எழுத்தெனப்படுப என்னுஞ்சூத்திரத்தினுள் எழுத்தினைத் தென்றறிவித்தலை நுதலிற்றென்றல்.

உரைமுறைவைப் பென்பது நூலுண் முன்னம் பலபொருளை யதிகரித்தவழிப் பின்னுமவற்றை யம்முறையேவிரித்தல். அஃதாவது உயர்திணை யஃறிணையென வதிகரித்து ஆடூஉவறிசொன் மகடூஉவறி சொல் என்னுஞ்சூத்திரங்களா னிறுத்தமுறைபிறழா துயர்திணையை முற்கூறல். இன்னுமிதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துளோதாததன் காரியமாயின வழியதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந்துரைத்தலுமாம். அஃதாவது ஏழாவதுயிர் மயங்கியலில் “அகரவிறுதிப்பெயர்நிலைமுன்ன” ரென்னுஞ் சூத்திரத்திற் கசதபத் தோன்றினெனக்கூறி, வினையெஞ்சுகிளவியுமென்னுஞ் சூத்திரத்திற் கூறிற்றிலரேனும் அதிகாரமுறைமையினால் வல்லெழுத்து வரும்வழி யெனவுரைத்தல்.

தொகைபெறநாட்டலென்பது வகைபெறக் கூறல் வேண்டுமாயினு மதனைத் தொகுத்துக் கூறல். அஃதாவது “அகரமுதனகரவிறுவாய் முப்பஃதென்ப” என்றாற்போல்வன. இன்னும் பலசூத்திரத்தாற்கூறிய பொருளை யித்துணையுங்கூறப்பட்ட திஃதெனக் கூறலுமாம். அஃதாவது “தூக்கியல்வகையேயாங்கெனமொழிப” என்பதனாற்கொள்க.

வகைபெறக்காட்டலென்பது தொகைபெறக் கூறியவற்றை வகைபெறக் கூறல். அஃதாவது “அகரமுதனகரவிறுவாய்முப்பஃதென்ப” எனத் தொகுத்தவற்றை அ இ உ எ ஒ என்றும் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்றும் வகுத்தல். அன்றியும் “ஒளகாரவிறுவாய்ப், பன்னீரெழுத்து முயிரெனமொழிப” “னகாரவிறுவாய்ப், பதினெண்ணெழுத்து மெய்யெனமொழிப” என்பனவுமாம்.