விரிந்தவையிவையென விழுமிதிற் கூட்டலென்பது, தொகுத்தும் வகுத்துங் காட்டியவற்றை யிறப்பவிரியாமல் விழுமியவாக விரித்து முடித்தல். அஃதாவது “உயிர்மெய்யாய்தமுயிரளபொற்றள, பஃகிய இ உ ஐ ஒள மஃகான், றனிநிலைபத்துஞ்சார்பெழுத்தாகும்” என்னு மதனுட் சார்பெழுத்தெனத் தொகையாலொன்றும் வகையாற்பத்து மாகியவற்றை “உயிர்மெய்யிரட்டு நூற்றெட்டு” என்னுஞ் சூத்திரத்தான் “ஒன்றொழிமுந்நூற்றெழுபானென்ப” என விரித்ததன் மேலும் உயிர் மெய்க்குறில் உயிர்மெய்ந்நெடில் உயிர்மெய்யகரமெனவும் வல்லினம் மெல்லினம் இடையினம் எனவும் இறப்பவிரியாமல் விழுமிதாய்க்கூட்டல். தொகுத்த....... கோடலென்பது “றெட்டெழுத்திம்பரும்...... வல்லாறூர்ந்தே” என்னுஞ் சூத்திரத்தாற் பிறிதுமோர்பொருள் வகுத்துக் காட்டல். அஃதாவது “குற்றியலுகரமுறைப்பெயர்..... முதலும்” என்னுஞ் சூத்திரத்தான் மொழிமுதற் குற்றுகரமுங்கோடல். சொல்லின் முடிவினப் பொருண்முடித்த லென்பது மது. முந்துமொழிந்ததன்றலை தடுமாற்றே யென்பது முற்படவதிகரித்த பொருளை யம்முறையிற்கூறாது முறைபிறழக்கூறுதல். அதனை யங்ஙனங் கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல்வேண்டும். அது புள்ளிமயங்கியலுள் “ஞகாரையொற்றிய” என்ற சூத்திரத்தினுள் ஞகார வீறுகூறி யதன் பின்னர் ணகாரவீறுகூறாதே வருஞ்சூத்திரத்தினுள் “நகரவிறுதியுமதனோரற்றே” என முடிபொப்புமை நோக்கிக் கூறியதாற் கண்டுகொள்க. பலபொருட்... கோடலென்பது ஒருவகைப்பொருள் பலபொருட் கேற்குமாயினு மவற்றுணல்லதனைக் கோடல். அஃதாவது மெய்ப்பாட்டியலுள் அகத்திற்குரியவாகப் புகுமுகம்புரிதன் முதலாகக் கையறவுரைத்த லீறாகக் கூறிய அறுநான்கு மெய்ப்பாடும் அகத்தினுள் இரு வகைக் கைகோளுள்ளுங் களவினுள் முறையேவந்து கற்பினுளம் முறையே வரப்பெறாமையி னவைகளவிற்கே யுரித்தென விதந்து கூறலானறிக. அன்றியும் ஒரு சூத்திரம் பலபொருட்கேற்குமாயினு மதற்குணல்லதனைப் பொருளாகக்கோடலுமாம். அஃதாவது “வேண்டிய கல்வியாண்டு மூன்றிறவாது” என்பதற்குக் கல்வி வேண்டிய ஆண்டிற |