பக்கம் எண் :

14பாயிரவுரை

வாது அக் கல்வியெல்லா மூன்றுபாதத்தைக் கடவாதென்றதனாலறிக. அன்றி ஓதற்பிரிதற் காண்டு மூன்றென்பது பொருந்தாது. அன்றியும் “இலனென்னுமெவ்வமுரையாமையீதல், குலனுடையான்கண்ணேயுள” என்பதனுட் பலபொருடோன்றியவிடத்து முதலேகண்ட விரண்டு கிரிகையுமன்றி யிரப்போனின்னு மொருவர்பால் யானொன்று மில னென்னு மானபங்கங்கூறாம லிரக்கப்படுவோ னீகையெனப் பொருள் கோடலுமாம்.

மொழிந்த பொருளோடொன்றவைத்த லென்பது சூத்திரத்துப் பொருள் பலபடத் தோன்றுமாயினு முற்பட்ட சூத்திர யாப்பிற்கேற்பப் பொருளுரைத்தல். அஃதாவது “இலனென்னுமெவ்வமுரையாமை” என்னுங் குறளுக்கு முன்னருத்திக்கேற்பக் கூறிய பொருளன்றி “நல்லா றெனினுங்கொளறீதுமேலுலக, மில்லெனினுமீதலேநன்று” என்னு மேலிற் குறளிற் பொருள்கட்கொன்ற வும்மையைவிரித்து இலனென்னு மெவ்வமுரையாமையு மீகையுங் குலனுடையான் கண்ணேயுள எனவுரைத்தல் கொள்க.

மொழிந்தனமென்றலென்பது பலபொருள்களையும் அதிகரித்த வற்றுட் சிலபொருளை மேற்கூறப்பட்டனவென்றல். “அஃதாவது மாத்திரை யளவு மெழுத்தியல்வகையு, மேற்கிளந்தன்ன” வென்றதனாற் கொள்க.

மொழிவாமென்றலென்பது சில பொருளைக் கூறி யவற்றுள் ஒன்றனை யின்னவிடத்துக் கூறுவாமென்றல். அஃதாவது “குற்றியலிகரநிற்றல் வேண்டும்” என்ற சூத்திரத்தில் ஒருமொழிக் குற்றியலிகரங்கூறி அதன் பின்னர் இருமொழிக்கண்ணுங் குற்றியலிகரம் வருமென்பதற்கு “புணரியனிலையிடைக்குறுகலுமுரித்தே” என்னுஞ் சூத்திரத்தின் “உணரக் கூறின் முன்னர்த்தோன்று” மெனக்குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படுமென்றத னாலுணர்க.

இறந்தது காத்தலென்பது மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருஞ்சூத்திரத்தானமைத்தலாம். அஃதாவது முதனூலுக்குச் சூத்திரங் கூறிய பின்னர் “வழியெனப்படுவததன் வழித்தாகும்” என்று வழி நூற்குக்கூறிய சூத்திரத்தில் வழிநூலானாய பயன்