பக்கம் எண் :

பாயிரவுரை15

கூறாது மேல்வருஞ் சூத்திரங்களாயவவற்றின்கண் “வழியினெறியே நால்வகைத்தாகும்” என்ற பின்னர் அதனாலாயபய னதனிற்கூறாது “தொகுத்தல் விரித்தல்” என்னுஞ்சூத்திரத்தா லதனாலாயபயன் கூறல் இறந்தது காத்தலாயிற்று.

எதிரது போற்றலென்பது முன்பு கூறிய சூத்திரத்தானே மேல் வருஞ் சூத்திரப் பொருளையும் பாதுகாத்தமைத்தல். அஃதாவது நூன் மரபினுள் “உட்பெறுபுள்ளியுருவாகும்மே” எனப்பகரத்தோடு மகரத்திடை வரிவடிவிற் கிலக்கணங் கூறப்புகுந்து மேல்வருஞ் சூத்திரத்தின் “மெய்யினியற்கை புள்ளியொடுநிலையல்” என்றதனால் மெய்களிற்கூடிப் புறத்திற் பெறும்புள்ளியோ டுள்ளாற்பெறும்புள்ளியும் மகரத்திற்கு வரிவடிவாமெனக் கோடல் எதிரது போற்றலாயவாறு காண்க. “அற்புதஞ்சிலேடை” யென்னும் பொருளணியியற் சூத்திரமுமிது.

மொழியாததனைமுட்டின்றி முடித்தலென்பது சூத்திரத்தின் கண்ணேயெடுத்தோதாத பொருளை முட்டுப்படாம லுரையினான் முடித்தல். அஃதாவது “அரையளபுகுறுகன்மகரமுடைத்தே, யிசையிட னருகுந்தெரியுங்காலை” என்பதனாற்கொள்க. என்னை? அரையளவாகிய வெல்லையிற்குறுகிக் கான்மாத்திரையவாதலை மகரமெய்யுடைத் தஃதி யாண்டோவெனின் வேறோரெழுத்தின தோசையின் கண்ணதுதான் சிறுபான்மையவாகிவரு மாராயுங்காலத்தென்பதனாலாயிற்று. என்னை? கான்மாத்திரையென்பது சூத்திரத்தின் கண்ணவாய்ச்சொல்லி முடியாததனை யுரையினான் முட்டின்றி முடித்தலானெனக்கொள்க. இக் கருத்தினானே “சூத்திரத்திற் பொருளன்றியும் யாப்புற, வின்றியமையா தியைபவை யெல்லா, மொன்ற வுரைப்ப துரையெனப்படுமே” யென்றோதுவாராயிற்று.

வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதும், வாராதது கொண்டு வந்தது முடித்தலென்பதுமான ஒருங்கெண்ணப்பட்ட விரண்டிற்கும் ஒரோவொன்றாகப்பகுத்து இலக்கணங்கூறிய விரண்டனுள் பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்ததனைக் கொண்டு முன்னர்க்கூறிய சூத்திரத்துள் வருமிலக்கணத்திற்கு வாராததனைக் கூட்டிமுடித்தலும், முன்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வாராததனைக் கொண்டு பின்னர்க் கூறிய