பக்கம் எண் :

பாயிரவுரை17

ஆணைகூறலென்பது ஒருபொருளைக் கூறும்வழி யேதுவினாற் கூறலன்றித் தன்னாணையாற்கூறல். அது வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறியவழி அவர் விளியை முதல்வேற்றுமையிலடக்கினார். அதற்குத் திரிபு கூறாதே யதனை யெட்டாம் வேற்றுமை யென்றாலும் ஆண்டுக் கடாவப் படாமை.

தன்குறியிடுத லென்பது உலகின்கண் வழக்கின்றி யாசிரியன்றன் குறியிடல். அஃதாவது உயர்திணை அஃறிணையென்பன.

தந்துகொணர்ந்துரைத்த லென்பது முன்னராயினும் பின்னராயினு நின்ற சூத்திரச் சொல்லை யிடைநின்ற சூத்திரத்திற் கொணர்ந்து புணர்த்துரைத்தல். அஃதாவது “நெட்டெழுத்திம்பருந்தொடர்மொழி யீற்றுங், குற்றியலுகரம்வல்லா றூர்ந்தே” என்பதனில் முன்னின்ற சூத்திரத்தில் நிற்றல்வேண்டுமென்ற சொல்லைக் கொணர்ந்து புணர்த்துரைத்தல்.

மறுதலை சிதைத்துத்தன்றுணிபுரைத்த லென்பது நெட்டெழுத் தேழளபெடையென்பன குற்றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்தது. அது அஅஅ என நின்றதல்லவென அவர் மறுதலையைச் சிதைத்து வேறோரெழுத்தென்று கூறல்.

மாட்டெறிந்தொழித லென்பது முன் னொரு பொருட்கிலக்கணங் கூறிப் பின்னர்வருவது மதுபோலுமென்றல். அஃதாவது ஏழாவ துயிர்மயங்கியலில் “உகரவிறுதியகரவியற்றே” என்றல்.

இரட்டுறமொழித லென்பது ஒருவகையானின்ற தொடர்ச்சொல்லாதல் ஒரு சொல்லாதல் ஒரு செய்யுளகத்துப் பலபொருளை மொழிவதா மென்றவாறு. அஃதாவது “வந்தவரவென்னையெனவாட்கண்மடவாய் கேள், சிந்தை நலிகின்ற திருநீர்க்குமரியாட, வந்திலதனாய பயனென்னை மொழி கென்றாண், முந்திநலிகின்ற முதுமூப்பொழியுமென்றான்” என்பதனாலறிக. என்னை? திருநீர்க்குமரியாடவெனவே அழகிய நீர்மையையுடைய கன்னியாகிய நின்னைப் புணரவந்தேனென்பதனை மறைத்தனவாகவும், பொலிந்த தீர்த்தநீராகிய குமரியாற்றை யாடவந்தேனென