ஏழாவ துயிர்மயங்கியலிற் “பனியெனவரூஉங்காலவேற்றுமைக், கத்து மின்னுஞ் சாரியையாகும்” என்பதன்கண்ணுணர்க. என்னை? பனியத்துக்கொண்டான், பனியின்கட்சென்றான், பனியிற்சென்றான் என வரும். அவற்றுள் இன்பெற்றுழி முன்னர்க்கூறிய நாழிக்காயம், உரியக் காயம் என்பதுபோல வல்லெழுத்து மிகாது வீழ்க்க என்பதற்குப் பொருந்த வுய்த்துணர்தல். தீபகவகையாற் சிறப்புக்கூறலென்பது குணந் தொழில் சாதி பொருள் என்னு நான்கனுள் ஒன்றைக்குறித்தவொருசெல் செய்யுளிடத்து முதலிடைகடையென்னு மூன்றிடத்தினுள் ஓரிடத்தாகி யாதியினின்ற தந்தத்தளவுமோடவும் இடைநின்றது முன்னும்பின்னுமோடவும், இறுதிநின்ற திடையு முதலுமோடவுங் கவின்பெறக் கூறுதல். என்னை? “குணந்தொழில் சாதி பொருள்குறித்தொரு சொல், லொருவயினின்றும் பலவயிற்பொருடரிற், றீபகஞ்செய்யுண்மூவிடத்தியலும்” என்பது அணியியலாகலினுணர்க. அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும். சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்த லென்பது “பெயர்வினையும்மை சொற்பிரிப்பென வொழியிசை, யெதிர்மறையிசையெனுஞ்சொல் லொழிபொன்பது” மென்னுஞ் சொல்லெச்சங்களைக்கண்டு ஆங்காங்குச் சொல்லியவாற்றாற் பொருள்கோடலாம். அன்றியும் தொல்காப்பியர் நோக்கம் பற்றிப் பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்டவெனினுமாம். அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும். அவையும் வந்துழிக் கண்டுகொள்க. “என், றமைத்ததினகப்படவமையாதனவுஞ், சுருங்கக் கூறிய தொடர்பினைநாடி, யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே” என்பது, (என்றென்பது-எண்ணிடைச்சொல். ) ஆதலா லங்ஙனங்கூறிய முப்பத்திரண்டாக அமைத்ததி னமையாதனவாமவற்றையுஞ் சுருங்கக் கூறலென்னு மழகுநோக்கியும், முன்னோர் தந்திரவுத்தி முப்பத்திரண்டெனக் கொண்ட வரையறை யிகவாமைக்கூறியதாகநோக்கி மிதனகத்தமைந்தனவாக வுணர்த்துதல் அறிவுடையோர்க்கு முறைமை யென்றவாறு. அமையாதனவாவன பலவுள. அவற்றுள்ளுஞ் சில வருமாறு. வேண்டாது கூறிவேண்டியது முடித்தல், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி |