வகுத்தல், பொருளிடையிடுதல் என்பன. அவையாவன :- “ஏனையுயிரேயுயர் திணைமருங்கிற், றாம்விளிகொள்ளாவென்மனார்புலவர்” என்னுஞ் சூத்திரத்தானும், “அளபெடைமிகூஉமிகரவிறுபெய, ரியற்கையவாகுஞ் செயற்கையவென்ப” என்னுஞ் சூத்திரத்தானும், “ஒருமைசுட்டிய பெயர்நிலைக்கிளவி, பன்மைக்காகுமிடனுமாருண்டே” என்னுஞ் சூத்திரத்தானு முணர்க. இவற்றுள் முன்னைய விரண்டும் விளிமரபு. மற்றையது எச்சவியல். அவற்றொடும் “ஆற்றொழுக்கரிமாநோக்கந்தவளைப், பாய்த்துப்பருந்தின் வீழ்ச்சிநிரனிறை” யென்பனவு மொருசாராசிரிய ருத்தியுளமைத்தாரெனக் குறித்ததாம். அன்றியும், ஒன்றற்கிலக்கணங்கூறும்வழி யொருசூத்திரத்துட் பலவுத்திவருவனவு முளவென்னுநோக்கத்தாற் கூறியதூஉமாம். அதற்குதாரணம் :- “எல்லாமொழிக்குமுயிர் வருவழியே, யுடம்படுமெய்யினுருவு கொளல்வரையார்” என்பதனாலுமுணர்க. என்னை? மூவகைப்பட்ட மொழிக்கு முயிர்முதன் மொழிவருமிடத்து இடை யுடம்படுமெய்யாகிய வடிவுகோடல் நீக்காரென்புழி யுடம்படுமெய் யென்றாரல்ல தவை யிவையெனக் கூறா ரவற்றை யுரையிற்கோடலென்று மவை யகரமும், வகரமும் எனவும், அவற்றுள் இ ஈ ஐ வழியவ்வும் அல்லனவருவழி வகரமும் வரும் எனக்கோடலானும் ஒன்றினமுடித்த லென்னுமுத்தியான் விகாரப்பட்ட மொழிக்கண்ணு முடம்படுமெய் கொள்ளப்படுமெனக் கூறியதற் குதாரணம் மரவடி, ஆயிருதிணையெனவும் இரண்டுத்திவந்தவாற்றானறிக. தந்திரவுத்திமுற்றும். (25) 26. | அடிவரையுளவாயடிவரையிலவாம் பாட்டினும்பாவின்றெழுகிளவியினுங் காட்டியவெழுநிலத்தனவாய்க்கழறிய பொருளொடுகலந்துபுரைதீரொலிசெறிந் தெண்ணத்தகைசாலீராறடிநிமிர் பண்ணத்தியினும்பயில்வனவாகும். |
(எ-ன்) இதுவும் அந்நூலிற்கோ ரொழிபுகூறுதனுதலிற்று. (இ-ள்) குறளடி முதலாய வைவகையடியானும் வரையறையுள வாம்பாட்டினாலும், அடிவரையறையிலவாம் பாட்டினாலும் பாவின்றி |