திருக்குருகைப்பெருமாள்கவிராய னருட்குணத்துடன்வளர்சடையன் பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே. |
என்பது பாயிரம் :- எந்நூலுரைப்பினுமந் நூற்குப் பாயிரமுரைத்தே நூலுரைக்கவென்பதுமரபு. என்னை? “ஆயிரமுகத்தாலகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே.” என முன்னோர்கூறிய முறைமையானும், இந்நூலுடையாரும் “பொற்புறவிழுமியபொருள்பல புணர்க்கினுந், தற்சிறப்புளதே தந்திரமென்ப.” என்பதனானுமுணர்க. இப் பாயிரத்துக்குப் பொருண் மேற்காட்டுதும். 1. | புறவுரைமுகவுரைபுனைந்து ரைதந்துரை பதிகநூன்முகமணிந்துரைபாயிரம். |
(இதன்பொருள்) இவையேழும் பாயிரத்திற்குக் காரணப்பெயரா மென்றவாறு. (1) 2. | புறவுரையேயதுகேட்டென்னைபயனெனின் மாயிருஞாலத்தவர்மதித்தமைத்த பாயிரமில்லாப்பனுவல்கேட்கிற் காணாக்கடலிடைக்கலைஞரில்கலத்தரின் மாணாக்கன்றன்மதிபெரிதிடர்ப்படும். |
(என்னுதலிற்றோவெனின்) பாயிரமில்லாப் பனுவல் கேட்போன் மதியிடர்ப்படுதற் குவமையுணர்த்து தனுதலிற்று. (இதன்பொருள்) முந்து நூல் செய்தற்காசிரியர் மனத்தினாலுட் கொண்டு விதித்ததாம் பாயிரமில்லாத நூல்கேட்பானாகிற் கேட்ட மாணாக்கன்மதி முன்பு கண்டறியாத கடலிடத்து மீகானில்லா வங்கத்திற் செல்பவர் மதிபோல மிகவுமயக்கமெய்து மென்றவாறு; என்பதாற் பாயிரங் கேட்டல் பயனுடைத்தாயிற்று. (2) 3. | பொதுச்சிறப்பெனவதுபுகலிருவகைத்தே. |
(எ-ன்) பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று, |