பக்கம் எண் :

பாயிரவுரை3

(இ-ள்) பாயிரமென்ன வொன்றாய் நின்றவது பொதுவுஞ் சிறப்புமென முந்துநூல் கூறியதா மிரண்டுகூறுபாடுடைத்தென்றவாறு.

(3)

4. அவற்றுள்,
போக்கறுபனுவலுட்புகல்பொருளல்லா
தாக்கமுற்றனைத்தினுமமைவதுபொதுவே.

(எ-ன்) முறையானே பொதுப்பாயிரத்தியல்புணர்-ற்று.

(இ-ள்) அவ்விரண்டனுட் புலவராற் கூறப்பட்ட குற்றமற்ற நூல்களுட் கூறப்படும் பொருளல்லாத புறப்பொருளாயெல்லாநூன் முகத்து மின்றியமையா தாக்கம்பெற்றமைவது பொதுப்பாயிரமா மென்றவாறு. அமைதல் வெளிப்படாது மறைந்துமறைந்து நடத்தல். எல்லா நூன்முகத்தும் பொதுவாக மறைந்து நடத்தலிற் பொதுவெனக் காரணப்பெயராயிற்று.

(4)

5. அதுவே,
நுண்ணூனுவல்வோனுவல்வதனியற்கை
கொள்வோன்குறிப்பிற்கொள்கடன்றன்னொடுந்
தெள்ளிதினைந்தெனச்செப்பினர்புலவர்.

(எ-ன்) பொதுப்பாயிரத்தின் கூடுபாடுணர்-ற்று.

(இ-ள்) அப்பொதுப்பாயிரம் நுண்ணியநூலின்மரபும், நுவல் வோன்மரபும், நூல்நுவல்வதன்மரபும், கொள்வோன்மரபும், அம்மாணாக்கனுள்ளக் குறிப்பினாற் கொள்வதன் மரபு தன்னொடு மைந்தென்று தெள்ளியதாய்க் கூறினர் முந்து நூலாசிரியரென்றவாறு. ஏகாரமீற்றசை. தெள்ளிதினைந்தெனச் செப்பினரென்று சிறப்பித்தவதனால் “ஈரிரண்டென்ப பொதுவின்றொகையே” என்போர் சுருங்கக் கூறிய நோக்கமே நீக்கி யைந்தென்போர் நோக்கமே யுட்கொண்டாரென்பதாயிற்று.

(5)

6. அவற்றுள்,
உத்தமநூன்மரபுணர்த்துங்காலை
முத்திறத்தொன்றாய்ப்பாயிரமுதலுபு
நாற்பொருணலனுறநவில்வனவாகிச்