பக்கம் எண் :

4பாயிரவுரை

  சூத்திரமோத்துப்படலமென்றுரைபெறு
முறுப்புடைப்பிண்டத்தொடுமமைந்தஃகாக்
காண்டிகைவிருத்தியிற்காட்சிதந்தீரைங்
குற்றமொன்றின்றிக்குழகொடுமெண்ணான்
குத்தியிற்சிறந்ததென்றுரைத்தனர்புலவர்.

(எ-ன்) வைத்தமுறையானே நூன்மரபுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வைந்தனுள்ளு முத்தமநூலின திலக்கணத்தை யறிவிக்குமிடத்து முத்திறத்தொன்றென்பது முதலாக வெண்ணான்குத்தியீறாகப் பன்னிரண்டுகூற்றதாய்ச் சிறந்ததென்று மேனாட் கற்று வல்லோருரைத்தன ரென்றவாறு. எனவே, இந்நூலுடையார்க்கு மங்ஙனமுரைப்பதே கருத்தென்பதாயிற்று. பிண்டத்தொடு மமைந்தெனவே மகாபிண்டமு மொன்றுளதாகப் பன்மூன்றுண்டென வுணர்க. இவை பன்மூன்றும் மேற்காட்டும் வகைச்சூத்திரங்களாலுணர்க.

(6)

7. முத்திறத்தொன்றென்பனமுதல்வழிசார்பே.

(எ-ன்) தொகைச்சூத்திரத்தினுண் முதலே நூல்கண் மூன்று கூற்றினுளொன்றாமென்றா ரவையிவையென் றவற்றின் பெயரு முறையுந் தொகையுமுணர்-ற்று.

(இ-ள்) நூல்கண் மூன்று கூற்றினுளொன்றென்பன முதனூல் வழிநூல் சார்பு நூலென மூன்றுகூற்றனவாமென்றவாறு. நூலென்பதனை யதிகார முறையான் மூன்றினும் விரித்துரைக்க.

(7)

8. முதல்வனிற்சிறந்ததுமுதனூலாகும்.

(எ-ன்) முறையானே முதனூலாமாறுணர்-ற்று.

(இ-ள்) முதல்வனான் மொழிவதா யழிவிலாதே சிறப்பெய்தியது முந்து நூலாமென்றவாறு. அன்றியும் முதல்வன் றனதில்லாளுக்குரைத்ததாய்ச் சிறப்பெய்தி வருவதெனினுமாம். அதற்கு அரி அயன் அரன் எனுமிவர் பூமிதேவி காயத்திரி உமாதேவி என்பவர்க்குரைத்ததாய் எனக்கூறுக. இன்னும் அவ்விலேசானே இல்லென்பதனை யுவமவுரு