பாக்கி முதல்வனைப்போலப் பழமைத்தா யழிவில்லாதே சிறப்பெய்தி வருவதெனினுமாம். அது கருதியேயாம். (8) 9. | விழுமியமுதனூல்விதித்தவற்றினொடும் பழுதறச்சான்றோர்படைத்தவுந்தழீஇ வழுவின்றாய்வரல்வழி நூலாகும். |
(எ-ன்) வழி நூலாமாறுணர்-ற்று. (இ-ள்) முக்கியமான முதனூல் கூறிய விலக்கணங்களோடுங் குற்றமறக் கற்று வல்லோரால் விதித்து வழங்கிவருமி லக்கணங்களோடும் பொருந்தி முறைவழுவுதலின்றிப் புலவராலமைக்கப்பட்டு வருவது வழி நூலாமென்றவாறு. வழி-பின். (9) 10. | இவ்வகைப்பனுவலோடொத்திழுக்கின்றாய்ச் செவ்விதிற்சிறிது திரிவதுசார்பே. |
(எ-ன்) சார்புநூலாமாறுணர்-ற்று. (இ-ள்) இங்ஙனமிரண்டு திறத்தவாகப் பகுத்துக் கூறப்பட்ட நூல்களிரண்டோடுமொரு தன்மைத்தாகவொத்து அவற்றோடு மூன்றாவதோர் புலவ னிலக்கணமிழுக்கா தழகிதாகச் சிறிது வேறுபட விரிப்பது சார்பு நூலாமென்றவாறு. இம் மூன்றனுளொன்றாய்வருவது நூலென்றறிக. (10) 11. | அதன்வழிநடைபெறுமதுநால்வகைத்தே. |
(எ-ன்) வழிநூலினைத்தெனவுணர்-ற்று. (இ-ள்) இறந்ததுபோற்ற லென்னுமுத்தியான், முதல்வனிற் சிறந்த முதனூலின்வழியொழுகலாறுடைய வழி நூலானது நால்வகைப் படுமென்றவாறு. அதை முன்னர்க்காட்டுதும். (11) 12. | தொகுத்தலும்விரித்தலுந்தொகைவகைவிரியிற் பகுத்தலுமொழிபெயர்த்தலுமெனும்பான்மைய. |
(எ-ன்) மேற்காட்டப்படுமென்ற நால்வகை யாப்பிற்கும் பெயரு முறையுந் தொகையு முணர்-ற்று. |