(இ-ள்) முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலுந் தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலு மிருவகையையுந் தொகைவகைவிரியாகப் பகுத்துச் செய்தலும் வடமொழியைத் தமிழ் மொழியாகப் பெயர்த்துச் செய்தலுமெனப் பெரியோராற் கூறப்படும் பான்மையையுடைய அந்நால்வகையுமென்றவாறு. (12) 13. | பாயிரமுன்பின்பகர்நெறியினிலுறும். |
(எ-ன்) தொகைச்சூத்திரத்துட் பாயிரமுதலுபுவென்றா ரவை யிரண்டு முணருமாறுணர்-ற்று. (இ-ள்) பொதுவுஞ்சிறப்புமெனக் கூறிய பாயிரங்களினிலக்கணங்க ளிந்நூன்முகத்து முன்னரும் பின்னருங் கூறு மிருவகைச் சூத்திரங்களா னறியப்பெறு மென்றவாறு. எனவே வேறெடுத்துக் கூறப்படுவதில்லை யென்பதாம். (13) 14. | அறம்பொருளின்பம்வீடவைபகர்நாற்பொருள். |
(எ-ன்) நாற்பொருணலனுற நவில்வனவாகியென்றா ரவையிவை யென்பதுணர்-ற்று. (இ-ள்) அந்நூல்கள் பகருநாற்பொருள் அறனும் பொருளுமின்பமும் வீடுபேறுமாமென்றவாறு. (14) 15. | நூலினொருபொருணுதலியதொன்றாய்ச் சில்வகையெழுத்திற்செறிந்திடும்யாப்பாய்ப் பலதிறப்பயன்றெரிவுடையதோர்பண்பாய்ப் படிமக்கலத்துட்படுநிழல்பொருவ வொண்மையுநுண்மையுமுறுவதுசூத்திரம். |
(எ-ன்) நூல்கட்கங்கமாகிய சூத்திரங்களினிலக்கணமுணர்-ற்று. (இ-ள்) மேற்றொகுத்தன்முதலாய நால்வகையாப்பிற்றாம் நூலினுளொரு பொருளைக் குறித்ததொன்றாகிச் சில்வகையெழுத்தினா லகல் வின்றியடங்கிய யாப்பா யுரைக்குங்காற் பலவகைத்தாய பொருள்களெல்லாந் தன்னகத்தடக்கி யாராயப்படுவதோர் பண்புடைத்தாகி யாடி |