பக்கம் எண் :

பாயிரவுரை7

சிறிதாயினும் அகன்ற பொருள்களின் வடிவை யகத்தடக்கியறிவித்தாற் போல நுண்ணிய பொருண்மையோடு விளக்கமுடைத்தாய் மிகுவது சூத்திரமாமென்றவாறு.

(15)

16. அதுவே,
மாட்டுறுப்பரிமாநோக்கந்தவளைப்
பாய்த்தாற்றொழுக்குப்பருந்தின்வீழ்வொடு
நிரனிறைவிளக்கெனும்பொருள்கோணிலைத்தே.

(எ-ன்) சூத்திரங்களின் பொருள்கோணிலையுணர்-ற்று.

(இ-ள்) அச்சூத்திரம் மாட்டுறுப்புமுதலாகத் தீபகமீறாகக் கூறப்பட்ட வேழு பொருள்கோணிலையை யுடைத்தென்றவாறு. நிலைமை யுடைத்தென்றதனா லொழிந்தபொருள்கோளான் வருவனவுங்கொள்க.

(16)

17. ஓத்தெனப்படுவதோரினப்பொருளைக்
கோத்தொருநெறிபடக்கூறுவதாகும்.

(எ-ன்) இஃதோத்திலக்கணமுணர்-ற்று.

(இ-ள்) மேலோத்தெனக்கூறப்பட்டது ஓரினமாகியபொருள் களையிதற்கிஃதியைபுடைத்தென்ன நேரினமணிகளை வடத்திற்கோத்தாற் போல அடைவிலேசேர்த்தோரியலாகிய நடைபெறக் கூறுவதாமென்றவாறு. அது வேற்றுமையோத்து, வேற்றுமைமயங்கியல், விளிமரபென முறையே வேற்றுமையாயினும் வேறுவேறியலாக்கி யொரோரின மாகவுரைத்தவாற்றா னுணர்க.

(17)

18. படலமென்பது பன்னெறிப்பொருளாற்
புடைபடவிரவியபொது மொழித்தொடர்பே.

(எ-ன்) படலமென்பதனிலக்கணமுணர்-ற்று.

(இ-ள்) படலமென்று கூறப்படுவது பலவேறு நடைபெற்று வருபொருளா லிடம்பெற்று விரவிய பொதுமொழித்தாய்வருந் தொடர்புடைத்தாமென்றவாறு.

(18)