பக்கம் எண் :

8பாயிரவுரை

19. அவையொருமூன்றுமடக்குதல்பிண்டம்.

(எ-ன்) பிண்டமாமாறுணர்-ற்று.

(இ-ள்) மேற்கூறிய சூத்திர மோத்துப் படல மென்னுமூன்றுறுப்பையு மகத்தடக்குவது பிண்டமாமென்றவாறு. அம்மூன்றினையு முறுப்பெனவே பிண்டமென்ப துறுப்புடையவயவியென்பது பெற்றாம். அவையாவன : தொல்காப்பியமென்பது பிண்டம். அதனுள் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்பன படலம். ஒழிந்த விரண்டும் ஓத்தும் சூத்திரமுமாம்.

(19)

20. மிகத்தெளிவுடையவகத்தியமதுபோன்
முத்தமிழுட்கொளுமூன்றுபிண்டமுமுறுப்
பொத்தொருங்குட்கொளலுறின்மகாபிண்டம்.

(எ-ன்) மகாபிண்டமாமாறுணர்-ற்று.

(இ-ள்) மிகவுமுந்து நூல்களையாராய்ந்து தெளிந்த கேள்வியையுடைய அகத்தியனாற் கூறப்பட்ட வகத்தியமென்னு நூல்போல இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னு மூன்று பிண்டத்தினையுந் தனக்குறுப்பாகப் பொருந்தும்படி முழுதுமுட்கொண் டொருநூலாக நிற்றல்பொருந்தின் மகாபிண்டமாமென்றவாறு.

(20)

21. உற்றதுபதப்பொருளுதாரணமூன்றுடன்
கற்றவர்வினாவிடைகாட்டுதல்காண்டிகை.

(எ-ன்) வைத்தமுறையானே காண்டிகையாமாறுணர்-ற்று.

(இ-ள்) நூல்களைக் கற்றுணர்ந்த வாசிரியர் சூத்திரத்துட்கூறக் கருதியதுணர்த்தலுஞ் சூத்திரத்துட் சொற்றொறும் பொருளுணர்த்தலு மதற்குதாரண முணர்த்தலு மென்னு மிம்மூன்றுடன் கடாவுங் கடாயதற் கெதிர்மொழியுங் காட்டுதல் காண்டிகையாமென்றவாறு. வினாவல்-கடாவல், விடை - அதற்கெதிர்மொழி.

(21)

22. ஒன்றியசூத்திரத்துட்பொருளன்றியு
மின்றியமையாதனபுணர்த்திசைத்தவைந்