வங்கூழுயிர்த்தரவரிப்பதினதன்மேற் கண்ணகலிருவிசும்பொழிவில்காரணமா மண்முதலனைத்தையும்வளைத்தாவரிப்ப வகல்விசும்பினைத்தாமதபூதாதி தகவுடைத்தாயாவரித்திடுந்தன்மையி னமைதாவதனைமானஃதாவரித்துச் சமைதரவதனைமுற்றந்தாவரிக்கு முறைமையிற்காலமுக்குணத்துடன்முளைத்த வுறையுளாமாயையொழிவில்வான்பதத்தொடு மொருபேருருவினொருங்காவரித்த சுருதியுந்தொடர்தொடர்புடைத்தனிச்சோதியை யாற்றல்கூர்தமிழ்மறையதனகத்தனவாம் நூற்றுப்பத்தெனத்தொடர்நோக்குடையவற்றுண் முந்தியபத்துண்முதற்பத்ததனில் வந்ததோர்முதலாம்வனப்புடைப்பாட லோரடியதனகத்தொடுக்கியவென்றியின் வரியளிமுரல்வகுளாம்புயமாறா தெரிபவர்தெரிதொறுந்தெவிட்டாவினிமை யோராயிரத்தினுரனுடைவென்றி யாராய்பவரிவ்வகலிடத்தெவரே. | (572) |
இதுவும் ஞானவீரியமிகுதி. திணையுந் துறையும் இதுவு மது. குன்றாயிரஞ்சிரமுங்கையுமாயுருக்கொண்டதெனத் துன்றாடன்மூலபெலப்படைதான்முற்றுஞ்சுற்றியநா ளொன்றாமுருவமலகில்பல்கோடியுருவெனலாய்ச் சென்றாடல்கொண்டவன்வின்மையிங்கேதென்றுசெப்புவனே. | (573) |
இது சமர்வீரியமிகுதி. அலகில்பல்கோடியுருவம் - எண்ணிறந்த பலகோடியுருவம். துன்றுதல் - நெருங்குதல். சென்றாடல்கொண்டவன் என்பது ஆயிரம்வெள்ளம்படைக்கும் ஆயிரம்வெள்ளம் இராமனென்னும்படி ஓரொருவர்க் கோரொரிராமனென விரைந்தெதிர்முகநின்று சரமாரியைப்பொழிந்து வென்றிகொண்டவ னென்றவாறு. வின்மை - வில்வென்றியினதுதன்மை. இங் கேதென்று செப்புவனே என்பது இவ் |