வுலகின்கண்ணிருந்த அறிவின்மையேன் யாதென்றுகொண்டாடுவே னென்றவாறு. திணை - வாகை. துறை - பேராண்முல்லைஅல்லது வாகைசார்ந்தபுறத்திணையுள் வில்வென்றியுமாம். (159) 245. | கல்விச்செல்வமுங்கவின்பொருளுடைமைச் செல்வமுமெனவிருதிறத்தவாஞ்செல்வம். |
(எ-ன்) செல்வமிகுதியின்பகுதி யுணர் - ற்று. இதன்பொருளும் உரையிற்கொள்க. பல்வித்தகமறையின்றுறைபோயவற்றுட்பரன்சீர் சொல்வித்தகமறைதோய்ந்தெதிராசன்றுணிந்துகொண்ட கல்விப்பொருளன்பர்க்கெல்லாமளிக்கவுங்கண்ணகன்ற நல்வித்தகமிறையுங்குறையாதுண்ணயந்தனவே. | (574) |
இது கல்விச்செல்வமிகுதி. இதனுள், மறையின்றுறைபோய் என்பது வேதத்தின் முடிவை யறிவினாற்கடந் தென்றவாறு. அங்ஙனம் பலவிதப்பட்ட சதிர்பெற்றமறை ஆதியோ டந்தமும் நடுவும் ஸ்ரீமந் நாராயணனேபரப்பிரமமென்பதனைச் சந்தயமற ஞானத்தாலறிந்து எதிராசனுட்கொண்ட ஞானமாகிய கல்விப்பொருளை யன்பொடு தன்பாற் கற்ற சீடர்க்குப் பரவுபகாரத்தாற் றானறிந்தபடியெல்லாவற்றையும் அவர்கள்வேண்டக் கொடுத்தும் அவனுள்ளத்து நிறைந்த நன்பொருட் சதிர்ப்பாடு சிறிதுங்குறையாது அவன்கண் ணயந் துறவுகொண்டன வென்றவாறு. திணை - பாடாண். துறை - அறுமுறைவாழ்த்தினுளடங்கும். திருப்பூரநாள்வந்தபுத்தூர்மடந்தைதிருமுலைப்பொற் பொருப்பூர்புயல்வடவேங்கடத்தான்மெய்ப்புழுகிற்பொத்துங் கருப்பூரத்தூள்விலைக்கோர்நாட்சிற்றுண்டிகருனையுண்டி விருப்பூரத்துய்ப்பதற்கொப்போபிறர்வைக்குமெய்ப்பொருளே. | (575) |
இது பொருட்செல்வமிகுதி. அஃதேல் இஃ ததிசயத்தின்பாற் படுமோவெனின் அதனகத் தகப்படாதுஎன்னை? திருமேனியிற்பூசின புழுகுமறையப்பொதிந்து திருமஞ்சனத்திற் கரையுங் கருப்பூரத்தூளி யின்சோதி மேலேதோன்ற மிகவும் பன்னாட்பொதிதலானும், திருப்பணியாரவகை பொரிக்கறியமுதுவகை திருப்போனகவகைபிறர் அமுது |