பக்கம் எண் :

364மாறனலங்காரம்

செய்பவற்றினும்மிகுந்தது மெய்யாதலானும் உதாத்தமேயாம். திணை - வாகைசார்ந்தபுறத்திணை. துறை - செல்வவென்றி.

அவற்றொடுமென்னுமும்மை யெச்சவும்மையாதலாற் பிறவற்றோடும் வருவனவு முள. அவற்றுள்ளுஞ் சிலவருமாறு

ஆங்கதற்கணியாமாதியாவரணமொன்றினுக்
      களவில்பேரண்டம்
வாங்குபுகவவுபுரிநெடுந்திகிரிவரைகளோர்
      மருங்கினுக்காற்றா
வோங்குபுபிறங்குசிகரகோபுரங்களொருவனீ
      ராயிரங்கரங்கண்
டாங்குபுதூண்டிக்காண்டொறும்வரம்பு
      தரித்திடற்கரியதன்மையவே.
(576)

இஃ திடமிகுதி. திணை - பொதுவியல். துறை - புலவரேத்தும் புத்தேணாடுவாழ்த்து.

(160)

60-வது உதாத்தம் முற்றும்.

--------

61-வது ஆசியலங்காரம்

-----0-----

246. வாழ்த்துவதாமேவாழ்த்தெனப்படுமே.

(எ-ன்) வைத்தமுறையானே வாழ்த்தென்னுமலங்காரம் உணர்-ற்று.

வாழ்த்தெனினும் ஆசியெனினும் ஒக்கும். வாழ்த்துவதாமே யெனப் பன்மைப்பாலாகக் கூறியவதனா லவை பலவென்பனவாம். அவை மேற்கூறப்படும்.

(161)

247. அதுவே,
கடவுள்வாழ்த்தேயறுமுறைவாழ்த்தெனத்
திடனுறவருமிருசிறப்பினவாகி
யியற்கையினமைதியியன்றமக்களை
வாழ்த்துதறானுமரீஇயதொன்றாகும்.