(எ-ன்) இதுவும் அவ்வாழ்த்தினை விரித்துணர்-ற்று. (இ-ள்) அவ்வாழ்த்தென்னுமது, கடவுள்வாழ்த்தெனவும் அறுமுறை வாழ்த்தெனவும் உண்மையாய்நிகழும் இரண்டுகூற்றவாகி, அவற்றோடுஞ் செயற்கையானன்றி இயற்கையான் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடியென்னும் நான்கும் அமைவெய்திய நன்மக்களை வாழ்த்துதறானும் பொருந்தியதொன்றாகு மென்றவாறு. (162) 248. | மறையவர்துறவோர்மழைநாடாவுடன் பொறைபுரியரசெனப்புகலிவையாவு மமரர்கண்ணெனலாமறுமுறைவாழ்த்தே. |
(எ-ன்) வைத்தமுறையானே யறுமுறைவாழ்த்தினது பெயரும் முறையும் தொகையும் உணர்-ற்று. இதன்பொரு ளுரையிற் கொள்க. இவற்றிற்குச் செய்யுள் வருமாறு:- பூமாதுநிழன்மணிப்பூண்பொதியவிழ்பொன்னிதழ்ப்புனிதத் தேமாலைநறுங்களபஞ்செறிமார்பத்திடைமுயங்க வளப்பரிதாம்பகிரண்டத்தப்புறமுமகத்தடக்கி யுலப்பிலிளங்கதிருதயத்தொளிகிளர்பேருருவாயும் நன்னரங்கத்தணுக்கடொறுநயந்தணுவாகியுமெழில்கூர் தென்னரங்கத்தரவணைமேற்சிறந்திருகண்வளர்ந்துளாய். |
இஃ தாறடித்தரவு. ஒருசுடராஞ்சொருபமுடனுருவமமைந்தொருசுடரோ டிருசுடராய்க்குணமொருமூன்றெனலாகிமுறைமுறையே படைப்பதையுமழிப்பதையும்புறம்போக்கிப்பழிபிறங்கா திடைப்படுகாவலையெனதென்றெடுத்ததெவனருளுதியே |
நின்றனவாயியங்குனவாய்நீடியபல்லுருவமைத்தோன் பொன்றியநாளெழுந்தபெரும்புனற்படிந்தவுயிர்களைநீ யெம்மானே திருவுதரத்திருத்தியகாவற்கவற்றாற் கைம்மாறங்கெவனோநீகைக்கொண்டதருளுதியே |
புறம்பயின்றவினைவழிசார்போக்குவரவினும்பிரியா தறம்புரிவதணுவுளவேலதற்கவற்றையெடுத்தனையா |
|