யுண்ணீர்மையற்றனமாய்ந்துறுநரகிற்புகுவதுறீஇக் கண்ணீர்கொண்டகன்றகலாக்காவலெவனருளுதியே |
இவை மூன்றும் ஒருபொருண்மேன்மூன்றடுக்கி நான்கடித்தாய் இரண்டுவிகற்பத்தால்வந்த தாழிசை. தரணியுளெவரொடுமுரணியபெருவிற லிரணியன்வரனெனுமரணறவிகலினை |
ஒருபதுசிரமுடனிருபதுகரமுள நிருதனதுயிர்மிசைபொருகணைசிதறினை |
மறையவரிறையவருறைவயின்வடுவுரை பறைபவனுயிர்புகுமறைகழலிணையினை |
முதலையினிடருறுமதமலைமடுவினு ளுதவுகவெனுமுரையதனொடுமுதவினை |
இவைநான்கும் அராகம். என்னை? “உருட்டுவண்ணமராகந் தொடுக்கும்” என்பதனாற் குறிலிணைந் துருட்டிவந்ததுகாண்க. வஞ்சனையோர்வடிவெடுத்துமாதுலனாமறைபயின்ற கஞ்சனைக்கொன்றுரகேசன்கடும்பொறையைத்தவிர்த்தனையே |
குருகுலத்தார்நூற்றுவரைக்கூற்றுவனாட்டினிலிருத்தித் தருமன்முதலவர்க்கவனிதனியாளக்கொடுத்தனையே |
இவை நாற்சீரீரடி யிரண்டம்போதரங்கம். இவை பேரெண். கழிபெருங்கற்பினளாடைகழியாமனயந்தனையே வழிபடுந்தூதனுமாகிமடக்கோலைசுமந்தனையே ததிபாண்டன்றனக்கழியாத்தமனியநாடளித்தனையே விதிகாண்டற்குலப்பில்பலவேடமவைகொண்டனையே |
இவை நாற்சீரோரடி நாலம்போதரங்கம். இவை அளவெண். அற்றேல் நாற்சீரீரடியிரண்டம்போதரங்கத்தோ டிதனிடை வேற்றுமை யாதோவெனின் எழுத்துமுதலா வீண்டியவடியிற் குறித்தபொருளை முடியநாட்டல் வேற்றுமையென்றறிக. இந்தநோக்கம் மேல்வரும் இடையெண் சிற்றெண்ணிற்கும் ஒக்கும். |