தாடகையுடலுயிர்போக்கினை தாபதன்மனதிடர்நீக்கினை நீடகலிகைபழிதீர்த்தனை நேயமுள்ளவனொடுசேர்த்தனை வில்லினைமிதிலையில்வளைத்தனை மெல்லியலிளமுலைதிளைத்தனை வல்லரவடல்கெடநடித்தனை மருதினைமுதலொடுமொடித்தனை |
இவை முச்சீரோரடியெட்டம்போதரங்கம். இவை யிடையெண். உறித்தயிர்கட்டுண்டனையே உரலிடைகட்டுண்டனையே மறித்துநிரைகாத்தனையே வழங்கினையைங்காத்தனையே குடநடமுன்பாடினையே குழலினிற்பண்பாடினையே படர்சகடம்பொடித்தனையே பகட்டுமருப்பொடித்தனையே நாவலன்பின்னடந்தனையே நடித்தனைமென்னடந்தனையே கோவலரில்லிறுத்தனையே கோள்விடையேழிறுத்தனையே புள்ளினைவாயிடந்தனையே புரந்தனைபாரிடந்தனையே தெள்ளமிர்தங்கடைந்தனையே தேவருளங்கடைந்தனையே. |
இவைபதினாறும் இருசீரோரடியம்போதரங்கம். இவை சிற்றெண். எனவாங்கு, (இது தனிச்சொல். ) இனையதன்மையவாமெண்ணருங்குணத்தி னினைவருங்காவனிகழ்த்தினையதனா |
|