பக்கம் எண் :

368மாறனலங்காரம்

னின்னதுகருணையுநீயு
மன்னியதிருவுடன்வாழிவாழியவே.
(577)

இது, நான்கடியாய் நேரிசையாசிரியத்தாலிற்ற சுரிதகம்.

இது வாழ்த்து. இது, முதலே யாறடித்தரவொன்றும், இரண்டு விகற்பத்து நான்கடித்தாழிசை மூன்றும், எண்சீர் நான்கராகமும், நாற்சீரீரடியிரண்டம்போதரங்கம், நாற்சீரோரடி நான்கம்போதரங்கம் முச்சீரோரடி எட்டம் போதரங்கம், இருசீரோரடிப் பதினாறம் போதரங்கம் என்னும் பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் ஆகிய நால்வகையும், தனிச்சொல்லும், சுரிதகமும் என்னும் ஆறுறுப்புங் குறைவின்றிவந்த வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா. இதனை வண்ணகவொத்தாழிசைக் கலிப்பாவென்பது வண்ணித்துப்புகழ்தலால் வண்ணகவொத்தாழிசைக்கலியென்றாராயிற்று. இஃ தொல்காப்பெருமைத் தொல்காப்பியத்திற்குக் காண்டிகையெழுதின நச்சினார்க்கினியார்நோக்கம். இவ்வாறன்றி “அராகமுடுகியல்வண்ணகமாகும்” என்னுஞ் சூத்திரத்தால் அராகமென்னுமுறுப்புப் பெற்றமையால் வண்ணகவொத்தாழிசைக் கலியாயிற்றென்பாரும் உளர். அஃ தியாப்பருங்கலக்காரிகையார் நோக்கம் இருவர் நோக்கமும் பகுத்துணர்ந்துகொள்க. துறை - கடவுள்வாழ்த்து.

வாழிமறையோர்மழைவாழியான்வாழி
வாழிவழுதிவளநாடு--வாழி
புவிப்பாவலர்புகழ்பூதூர்முனிவன்வாழி
கவிப்பாவலர்க்கரசென்கண்.
(578)

இஃ தறுமுறைவாழ்த்து. இவற்றைத் தனித்தனிவாழ்த்திற் றனித்தனி துறையும் வாழ்த்துமாம். இனி “வழங்கியன்மருங்கின் வகைபடநிலைஇப், பரவலும்” என்னுஞ் சூத்திரத்தான் மக்களை வண்ணப் பகுதிவரைவின்றாகப் பாடியவாழ்த்துஞ் செந்துறைப்பாடாண்பாட்டாகிய துறையான் வருவனவாம் வாழ்த்துக்களும் வந்துழிக் கண்டுகொள்க. அதுவும் இயற்கையால் அமைதியுடையமக்களைவாழ்த்துதலாம்

(163)

61-வது ஆசி முற்றும்.

-------