பக்கம் எண் :

(பொருளணியியலுரை)369

62-வது சங்கரவலங்காரம்

-------0------

249. பாலுணீர்நிலையெனப்பகுத்துணர்வரிதாஞ்
சால்பினீரணிதழுவுதல்சங்கரம்.

(எ-ன்) வைத்தமுறையானே சங்கரமென்னுமலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) பாலினிடத்துக்கலந்த நீர்போல வோரணி வெளிப்படை யாய்த்தோன்றிப் பிறிதோரணி குறிப்பினாற்கொள்ளும்படிக் கிரண்டணி யாய்நிற்பன சங்கரமென்னுமலங்காரமா மென்றவாறு.

நறையார்வகுளப்பிரான்குருகூரனன்னீர்பொருநைத்
துறையான்வழுதிநன்னாட்டெங்கண்மாதுன்னைத்தோய்ந்தமுதுக்
குறையாலரும்பம்பலாயதுநாளுங்குறைநயந்துன்
மறையால்வரவரவேயலரானதுமன்னவனே.
(579)

இது சங்கரம். என்னை? அரும்பம்பல் - சற்றேதோன்றப்பட்டுச் சிலரறிந்து தம்முட் புறங்கூறல்அலராயது - இறைவனேநீ யிங்ஙனம் மறைவயினீட்டித்தொழுகலாற் பலரும் அறிந்து தூற்றும் அலராயிற்று என்பது பொருள்அங்ஙனந்தொடர்ந்த தொடர்மொழியுள் வறிதே அம்பலென்னாது அரும்பென்னுங் கிரியையால் அம்பலாகிய அரும்பென்னு மாட்டேறில்லாத வுருவகந்தோன்ற, அலராயிற்றெனவே மலர்ந்த போதாயிற்றெனவுஞ் சிலேடை குறிப்பினாற்கொள்ளப்படுதலா லீரணி யாதலானென் றறிக. அரும்பம்பல் - வினைத்தொகை. அரும்புதல் - தோன்றுதல். பகுதி - இரவுக்குறி. துறை - அலரறிவுறுத்தி வரைவு கடாதல்.

(164)

62-வது சங்கரம் முற்றும்.

--------

63-வது சங்கீரணவலங்காரம்

-----0---

250. எட்பயறொடுதண்டுலமிவையொளிதிகழ்
கட்புலங்கொளவிரவியகாட்சியபோன்