| றிரண்டிறந்தனவாயினிமையினணிபல திரண்டனசங்கீரணமெனச்செப்பினர். |
(எ-ன்) வைத்தமுறையானே சங்கீரணமென்னுமலங்காரம் உணர்-ற்று. (இ-ள்) முந்தையதுபோற் குறிப்பின்றி யெள்ளும், பயறும், தண்டுலமுமென்னுமிவை கண்ணினதறிவிற்குத்தோன்றக் கலந்ததோற் றம்போல யாப்பினுள் இரண்டிறந்த பலவணி தழுவுவனவாய்க் கேட் டோருணர்விற்கொள்ளும்படி பாடுவது சங்கீரணமென்னுமலங்காரமா மென்றவாறு. இழுதளைவாட்கண்ணுமிருளளைகக்காரு முழுமதிதேய்ந்துட்குமுகமுங்--கெழுதகைத்தாய்ச் சேந்தவிழ்ந்துவேர்கூர்திறந்தருநாவீறரணி தோய்ந்ததுடரிப்பூஞ்சுனை. | (580) |
இது சங்கீரணம். இதனுள், வாட்கண்ணெனவே யுவமையும், அளகக்காரெனவே யுருவகமும், முழுமதிதேய்ந்துட்குமுகமெனவே தற்குறிப்பேற்றமும், சேந்தவிழ்ந்துவேர்கூர்திறந்தருமெனவே நிரனிறையும், சுனை வேர்கூர்திறந்தருமெனவே அயுத்தவேதுவும், நகையென்னுஞ் சுவையும் விரவியவாறுகாண்க. பகுதி - நாணநாட்டம். துறை - புணர்ச்சியுரைத்தல். விள்ளாதகாதல்விழிவழியாய்த்தன்னிதயத் துள்ளாயகாதலர்க்குச்சிட்டமதாமென்றுணவுட் கொள்ளாததேதுக்குறித்துறங்காக்கண்கலுழ்வ துள்ளாதெனுமாறனூர். | (581) |
இதுவுமது. இது, பொருள்வயிற்பிரிவின்கட் டலைமகனைத் தோழி யியற்பழித்துரைப்பத் தலைமகள் தனதாற்றாமையை மறைத்து இயற்பட மொழிந்ததனையுட்கொண்டு தோழி யவளது காதற்சிறப்புணர்தல். (இ-ள்) உண்டியைவெறுக்கவுங் கண்டுயில்வெறுத்துக் கலுழவும் பொருள்வயிற்பிரிந்ததலைவர் கடைப்பிடியுடையரல்லரென் றியற்பழித்த தனைக்கேட்டுத் தலைமகன்மேல்வைத்தவுள்ளக்குறிப்பால் விட்டுநீங்காத காதலையுடையா ளிடைவிடாதுநோக்குதலால், விழிவழியாகத்தன |