பக்கம் எண் :

(பொருளணியியலுரை)371

திதயத்துட்குடிபுகுந்த தன்றலைவர்க்குத் தான்றுய்ப்பதியாதாயினு மவர்க்குச்சேடமாமென்று உண்டியைவெறுத்ததையுங் காரிமாறப்பிரான் குருகாபுரியினுள்ளார் உண்மையென் றுட்கொள்ளா ரென்னுமதுவேயு மன்றியித்துன்பத்திற் கேதுவாயினமென் றுட்கொண்டு தனதுகண்கள் உறங்காது கலுழ்வதனையும் உண்மையென்றுகொள்ளாரென்னுமாதலால் இவள்காதற்சிறப்பிருந்தபடி யென்னென்றவாறு.

மாறனூருள்ளாதென்பதனை யிறுதிவிளக்காக்கி யீரிடத்துங்கூட்டுக. எண்ணும்மை யீரிடத்துஞ் செய்யுள்விகாரத்தாற் றொக்கன. காதலும் மாறனூரும் ஆகுபெயர். உச்சிட்டம் - சேடம். இதற்கு இவளது காதற்சிறப்பிருந்தபடி யென்னென்பது சொல்லெச்சமின்றிக் குறிப்பெச்சமாய்ப் பயனிலையாயிற்று. பகுதி - பொருட்பிரிவு. துறை - காதற்சிறப்புரைத்தல்.

இதனுள் உண்டிவெறுத்ததனையும், கண்கலுழ்வதனையும் மறைத்துக்கூறினமையால் இலேசமும், உள்ளாதென்பது இறுதிவிளக்காகத் தீபகமும், விழிவழியென்பது எது கையலங்காரமும், விழிவழி யிதயத்துட்புக் காரென அற்புதமும், சுவை பெருமையைச்சார்ந்த அழுகையும் ஆகப் பலவணி காண்க. பா - ஒருவிகற்பத்தின்னிசைவெண்பா.

காவலர்போற்காவலர்போற்காதங்கமழனந்தை
காவலனைக்காவலர்தூஉய்க்காவலெனக்கற்றுணர்ந்தோர்
காவலனேகாவலனேகாத்தியெனக்கண்டுற்றுங்
காவலகாவென்னார்கலர்.
(582)

அலங்காரம் இதுவுமது. என்னை? காவலர்போற்காவலர்போலெனச் சொற்பின்வருநிலையும், பூரணவுவமையும், காதங்கமழனந்தையெனவே அதிசயமும், பிறர்கட்டோன்றியவறுமைபற்றி அழுகை யென்னுஞ் சுவையும் வந்தமையால் அறிக. திணை - பொதுவியல். துறை - முதுமொழிக்காஞ்சி. பா - ஒருமொழியொருவிகற்பத் தின்னிசை வெண்பா.

கோங்கரும்புபோலுங்குவிமுலைகடாம்புயத்து
ளாங்கரும்புமுல்லையரும்பேய்க்கும்--பூங்குழற்குச்
செவ்வாயும்வெண்ணகையுஞ்செண்பகமாறன்சிலம்பிற்
காமர்சுனைக்காவிகண்.
(583)