பக்கம் எண் :

(பொருளணியியலுரை)373

64-வது பாவிகவலங்காரம்

-----0-----

251. விளம்பியகாப்பியக்குணங்கள்பாவிகமே.

(எ-ன்) வைத்தமுறையானே யிறுதிநின்ற பாவிகமென்னுமலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) விளம்பியகாப்பியக்குணங்களென்பது முன்னர்ப்பொது வியலுட்கூறிய காப்பியக்குணங்கள். பாவிகமே - ஈற்றில்நின்ற அறுபத்துநாலா மலங்காரமா மென்றவாறு.

குணமாவன:அப்பொருட்டொடர்நிலைமுழுவதூஉம் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித் தொருபாட்டாற்கொள்ளப்படாதெனக் கொள்க. அவற்றுட் சில வருமாறு

“கற்றதனாலாய பயனென்கொல்வாலறிவ
 னற்றாடொழாஅரெனின்”
(586)

“சிறப்பொடுபூசனைசெல்லாதுவானம்
 வறக்குமேல்வானோர்க்குமீண்டு”
(587)

“ஒழுக்கத்துநீத்தார்பெருமைவிழுப்பத்து
 வேண்டும்பனுவற்றுணிவு”
(588)

“சிறப்பீனுஞ்செல்வமுமீனுமறத்தினூஉங்
 காக்கமெவனோவுயிர்க்கு”
(589)

“இல்வாழ்வானென்பானியல்புடையமூவர்க்கு
 நல்லாற்றினின்றதுணை”
(590)

“சிறைகாக்குங்காப்பெவன்செய்யுமகளிர்
 நிறைகாக்குங்காப்பேதலை”
(591)

“பெறுமவற்றுள்யாமறிவதில்லையறிவறிந்த
 மக்கட்பேறல்லபிற”
(592)

“என்பிலதனைவெயில்போலக்காயுமே
 யன்பிலதனையறம்”
(593)