பக்கம் எண் :

(பொருளணியியலுரை)375

“ஈத்துவக்குமின்பமறியார்கொறாமுடைமை
 வைத்திழக்கும்வன்கணவர்”
(608)

“புகழ்படவாழாதார்தந்நோவார்தம்மை
 யிகழ்வாரைநோவதெவன்”
(609)

“அருட்செல்வஞ்செல்வத்துட்செல்வம்பொருட்செல்வம்
 பூரியார்கண்ணுமுள”
(610)

“அவிசொரிந்தாயிரம்வேட்டலினொன்ற
 னுயிர்செகுத்துண்ணாமைநன்று”
(611)

“தவஞ்செய்வார்தங்கருமஞ்செய்வார்மற்றல்லா
 ரவஞ்செய்வாராசையுட்பட்டு”
(612)

“வலியினிலைமையான்வல்லுருவம்பெற்றம்
 புலியின்றோல்போர்த்துமேய்ந்தற்று”
(613)

“உள்ளத்தாலுள்ளலுந்தீதேபிறன்பொருளைக்
 கள்ளத்தாற்கொள்வேமெனல்”
(614)

“பொய்யாமைபொய்யாமையாற்றினறம்பிற
 செய்யாமைசெய்யாமைநன்று”
(615)

“இறந்தாரிறந்தாரனையர்சினத்தைத்
 துறந்தார்துறந்தார்துணை”
(616)

“பிறர்க்கின்னாமுற்பகற்செய்யிற்றமக்கின்னா
 பிற்பகற்றாமேவரும்”
(617)

“அறவினையாதெனிற்கொல்லாமைகோறல்
 பிறவினையெல்லாந்தரும்”
(618)

“ஒருபொழுதும்வாழ்வதறியார்கருதுப
 கோடியுமல்லபல”
(619)

“இயல்பாகுநோன்பிற்கொன்றின்மையுடைமை
 மயலாகுமற்றும்பெயர்த்து”
(620)

“ஐயுணர்வெய்தியக்கண்ணும்பயமின்றே
 மெய்யுணர்வில்லாதவர்க்கு”
(621)