ஸ்ரீ: மூன்றாவது சொல்லணியியலுரை ---0---- மடக்கு 252. | குறித்துரையெழுத்தின்கூட்டமுதன்மொழி மறித்துமோர்பொருடரமடக்குதன்மடக்கே. |
என்பது சூத்திரம். இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின், சொல்லானாமணிகளினியல்புணர்த்திற்றாதலாற் சொல்லணியியலென்னும் பெயர்த்து. அஃதாக, இச்சூத்திர மென்னுதலிற்றோவெனின், பொதுவகையான் மடக்கென்னுமலங்கார முணர்-ற்று. (இ-ள்) புலவனா லொருபொருள்குறிக்கப்பட்டுச் செய்யுளினிடத்துத் தொடரெழுத்தாற்சொல்லப்பட்ட முதன்மொழி வருமொழியுமாய்ப் பெயர்த்துமொருபொருடருவதாகமடக்குவதூஉம் மடக்கென்னும் அலங்காரமா மென்றவாறு. உம்மையாற் றொடரெழுத்துமொழியன்றி ஓரெழுத்தே பெயர்த்து மடக்குவதும் மடக்கேயா மென்றவாறு. புலவன், பொருள், செய்யுள், வருமொழியென்பன சொல்லெச்சம். எழுத்தின்கூட்டமெனவே இரண்டு முதலாகிய வெல்லாவெழுத்துமெனக் கொள்க (1) 253. | அதுவே, தொடர்பிடைவிடாதுந்தொடர்பிடைவிட்டு மடைவினிலிருமையுமமைவனவாகியு நடைபெறுமுப்பாற்றெனநவின்றனரே. |
(எ-ன்) அம் மடக்கினதுபாகுபாடுணர்-ற்று. (இ-ள்) அச்சொல்லப்பட்டமடக்கு, தம்மிற்றாந்தொடருத லிடைவிடாது மிடைவிட்டு முறையே யிரண்டு தன்மையும்பொருந்துவனவாகியு மொருசெய்யுளகத்து நடக்கு மூன்றுபகுதியையுடைத்தென்று முதனூலாசிரியர் கூறின ரென்றவாறு. எனவே இது வழி நூலென்பதுந் தமக்கு மதுவேகருத்தென்பதுங் கூறினாரெனக் கொள்க. (2) |