254. | ஒன்றாதியவாவொருநான்களவுஞ் சென்றுநடைபெறுஞ்சீர்த்ததற்கடியே. |
(எ-ன்) இதுவும் அதனையே வகுத்துணர்-ற்று. (இ-ள்) அதற்கு (அம்மடக்கிற்கு) அடிவரையறை நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுதலாக வீரடிக்கண்ணு மூன்றடிக் கண்ணு நான்கடிக்கண்ணு முன்னர்க்கூறியபடியே சென்று நடக்கு மழகினையுடைத் தென்றவாறு. ஒருநான்களவுமென்றதனால் நான்கடிச்செய்யுளென்ப தாற்றலாற் போந்தபொருள். ஒருநான்களவுமென்னு மும்மை முற்றும்மையெனக் கொள்க. அவற்றிற்கெல்லாஞ் செய்யுண் மேற்காட்டுதும். (3) 255. | முதலிடைகடையேமுதலொடிடைகடை யிடையொடுகடைமுழுதெனவெழுவகைத்தே. |
(எ-ன்) இதுவு மதனையே வகுத்துணர்--ற்று. (இ-ள்) அம்மடக்கு முதன்மடக்கும், இடைமடக்கும், கடைமடக்கும், முதலொடிடைமடக்கும், முதலொடுகடைமடக்கும், இடையொடுகடைமடக்கும், முற்றுமடக்கும் என முறையே எழுவகைப்படு மென்றவாறு. அம்மடக்கென்பது அதிகாரம்பற்றி விரிந்தது. (4) 256. | அவற்றுள், அடிமுதன்மடக்கோரைம்மூன்றாகும். | (5) |
257. | இடைகடையவுமதனெண்ணிலைபெறுமே. | (6) |
258. | உணர்வுறின்மடக்கிவையோரிடத்தனவே. |
(எ-ன்) இவைமூன்றுசூத்திரமு மடிதொறு மோரிடத்தா மடக்கினது தானமு மெண்ணும் வரையறுத்துணர்-ற்று. (இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வெழுவகைத்தானத்தினுள்ளும், அடிமுதன்மடக்குப் பதினைந்தாம்இடைமடக்குங் கடைமடக்கு மென்னப்பட்ட விரண்டு மொரோவொன்று முன்னர்க்கூறிய அடிமுதன் மடக்குப்போலப் பதினைந்து பதினைந்தென்னு மெண்ணினதுவரையறை நிலைபெறுமென்றவாறுஆராயுமிடத் திவைநாற்பத்தைந்து மோரிடத்து மடக்கென்பனவா மென்றவாறு. |