அவையாவன முதலடிமுதன்மடக்கு, இரண்டாமடி முதன்மடக்கு, மூன்றாமடி முதன்மடக்கு, நாலாமடி முதன்மடக்கு இவைநாலு மோரடியோரிடத்து முதன்மடக்குஇனி, முதலிரண்டடியுமுதன்மடக்கு, முதலடியுமூன்றாமடியு முதன்மடக்கு, முதலடியுநாலாமடியுமுதன்மடக்கு, கடையிரண்டடியு முதன்மடக்கு, இடையிரண்டடியு முதன்மடக்கு, இரண்டாமடியுமீற்றடியுமுதன்மடக்கு இவையாறுமீரடிமுதன்மடக்கு, ஈற்றடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு, முதலயலடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு, ஈற்றயலடியொழித் தேனைமூன்றடியு முதன்மடக்கு முதலடி யொழித்தேனைமூன்றடியுட் முதன்மடக்கு இவைநாலு மூன்றடிமுதன்மடக்குநாலடிமுதன்முற்று மடக்குஆக விவைபதினைந்தும் அடிமுதன்மடக்கு. இனி, அடியிடை மடக்கும், அடியிறுதிமடக்குமிவ்வண்ணமே பதினைந்து பதினைந்தாம். இவை நாற்பத்தைந்திற்கு முதாரண முன்னர்க்காட்டுதும். (7) 259. | அடிதொறுமீரிடத்தனவாய்முதலொ டிடைகடையிடைகடைகளினியன்றனவுந் திதமுறநான்கறுபானெனச்சிவணி யதனொடுமடக்கொருநூற்றைந்தாகும். |
(எ-ன்) அடிதொறு மீரிடத்தனவாமடக்கிற்கும், மூவிடத்தனவா மடக்கிற்குந் தானமும் வரையறையு முணர்--ற்று. (இ-ள்) செய்யுளினடிதொறும் ஆதியொடிடை, ஆதியொடுகடை, இடையொடுகடை யென்றுசொல்லப்பட்ட தானங்களி னீரிடத்தனவாய் நடந்தனவும், முத லிடை கடையென மூன்றிடத்து மடக்குவனவுமான நாலுதானத்திலு முண்மையாக வறுபதென்று கூறும்படிக்குப் பொருந்தி முன்னர்க்கூறப்பட்ட வோரிடத்துமடக்கு நாற்பத்தைந்தொடு மடக்கு நூற்றைந்தா மென்றவாறு. இச்சூத்திரத்துண் முதலேவந்த முதலொடென்பதனை முதனிலைத் தீபகமாக்கி யிடைகடையென்னு மிரண்டினு மேற்றுக. (8) 260. | அவற்றுள், முதற்றொடைவிகற்பமேழொடுநான்கொடுந் திதப்படவோரடியொழிந்தனசிவணும். |
|