(எ-ன்) இதுவு மத்தானங்களைத் தொடைவிகற்பங்களாற் கூறுபடுத்தி விரித்துணர்--ற்று. (இ-ள்) அவற்றுள், (அங்ஙனங்கூறப்பட்ட வோரிடத்தனவு மீரிடத்தனவு மூவிடத்தனவுமாக மடக்குமவற்றுள்) அடியொடு பொருந்தின முதற்றொடை விகற்பமென்னு மிணைமுதலாகிய வேழொடுங் கடையிணை, யிடையிணை, முதற்கூழை, இரண்டாஞ்சீர் நான்காஞ்சீரொடு புணர்ந்த பின் னென்னு நான்கொடுங்கூடிப் பதினொருதொடைவிகற்பங்களொடுந் தெளிவுபெற வோரடியொழிந்தமடக்குகள் வருதலைப்பொருந்து மென்றவாறு. (9) 261. | இடைவிடாமடக்கிவையெனமொழிப. |
(எ-ன்) இது தொடர்பிடைவிடாதுமென்றசூத்திரத்தினுள் மூன்று பாகுபடு மடக் கென்றவற்றுள், முதலேகூறியபாகுபா டுணர்-ற்று. (இ-ள்) இங்ஙனங்கூறப்பட்ட நூற்றைந்துமே யிடைவிடாமடக் கென்றுகூறுவர் புலவரென்றவாறு. இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு மதியார்மதியார்வனைவேணியினான் விதியாலிரந்ததனைமீட்ட--முதியானை மாதவனையல்லான்மதிப்பரோபேரின்பத் தாதரவுபூண்டவுளத்தால். | (624) |
இது முதலடி முதன்மடக்கு. (இ-ள்) அறிவுடையோர், பிறையையும் ஆத்தித்தாரையுஞ்சூடின சடையையுடையான் பிரமசிரத்தையறுத்தகாரணத்தாற் பிரமசிரத்தி லிரந்ததனைப்போக்கின முதன்மையுடையோனைப் பெரியபிராட்டிகொழுநனை யுள்ளத்தாற்றியானிப்பதன்றிப் பரமபதத் தின்பத்தின்மே லாசை பற்றினவுள்ளத்தால் வேறொருகடவுளைத் தியானிப்பதில்லை யென்றவாறு. வேறொருகடவுளரையென்பது சொல்லெச்சம். ஓகாரம் - எதிர்மறை. இதற்குப் புலவிர்காளென்னு முன்னிலையெழுவாய் தோன்றாது நின்றதாக விரித்துரைக்க. மதிப்பரே யெனினுமாம். அதற்கு ஏகார மெதிர்மறை. திணை - பாடாண். துறை - செவியறிவுறூஉகடவுள்வாழ்த்துமாம். |