அமுதமடப்பாவையாடகப்போதல்கக் குமுதங்குமுதங்கொளுந்தீத்--தமியராய்த் தாழ்ந்தார்தமையன்றித்தண்ணளிமால் *கள்வனிற்பொய் சூழ்ந்தார்தமைவருத்தாதோ. | (625) |
இஃ திரண்டாமடி முதன்மடக்கு. (இ-ள்) அமுதமடப்பாவை - திருமகள். ஆடகப்போது - பொற்றாமரை. அல்கல் - குவிதல்வறுமையெய்தலெனினுமாம். குமுதம் - ஆம்பல். குமுதங்கொளுந்தீ - மகிழ்ச்சியெய்துந்தீ. தீ - சந்திரன், தன்னைச் சுடுதலாற் றீயென்றாள். தமியராய்த்தாழ்ந்தார் - புமான்களை நீங்கி மெலிந்தார். பொய்சூழ்ந்தார் - பொய்சொல்லவு நினைந்தார். தமை வருத்தாதோ - அவர்தமை வருத்தாதோ வருத்திற்றாகில் நமது தலைவரும் வருவர். வாராமையால் வருத்தாதொழிந்த தென்றவாறு. பகுதி - பொருள்வயிற்பிரிதல். துறை - நிலவுகண்டழுங்கல். இதற்குந் தோழீயென்பதனைத் தோன்றாதுநின்றதாக விரிக்க. ஓகாரம் வினா. சிட்டர்பரவுந்திருமால்செழும்பொழில்சூ 1ழட்டபுயகரத்துளாயிழையார்க்--கிட்டிடைதான் சித்திரமோசித்திரமோதெவ்வர்முரண்முருக்கு மத்திரமோகண்ணென்பவை. | (626) |
இது மூன்றாமடிமுதன்மடக்கு. (இ-ள்) சிட்டர் - தொண்டர். அட்டபுயகரம் - திருப்பதி. இட்டிடை - சிறியவிடை. சித்திரமோ என்னுமிரண்டனுள், ஒன்று வெளிஒன்று பொய். பகுதி - இயற்கை. துறை - தகையணங்குறுத்தல். நன்காரிமாறனெனுநாவீறன்வண்குருகூர் மன்கார்வரைமயிற்குமன்னவா--மென்கோங் கரும்பாங்கரும்பாங்களபமுலையின்சொற் சுரும்பாநயனத்துணை. | (627) |
* கள்வன் - திருக்கள்வனூர். 1 இது அட்டபுயங்கமெனப்படும். |