பக்கம் எண் :

382மாறனலங்காரம்

இதுவுமது. பகுதி - பாங்கற்கூட்டம். துறை- பாங்கன் செவ்வி செப்பல்.

தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளியங்குடியார்
தண்டுளபமார்பந்தழுவாநாள்--வண்டுளர்பூந்
தேனிலாய்நீண்டகுழற்சேயிழைதன்னாருயிரும்
வானிலாவானிலாவாம்.
(628)

இது நாலாமடிமுதன்மடக்கு.

(இ-ள்) வண்டுளர் - வண்டுகுடையும். பூந்தேனிலாய்நீண்டகுழல் - பூவிற்றே னிலைபெற்று நீண்ட குழல். சேயிழைதன்னாருயிரும் - சிவந்த பூணினையுடையாள்கேடில்லாவுயிரும். வானிலாவானிலாவாம் - விசும்பின் கண்ணுதிக்குமதியா லுடம்பின்கண் நில்லாததன்மையையுடைத்தா மென்றவாறு.

உயிரும் வானிலாவா னிலாவாம் என்பது நீருந் தன்பாலிருந்தன என்பதுபோல ஒருமையிற்பன்மை மயக்கம். திணை - பெருந்திணை. துறை - கண்டுகைசோர்தல். இவை நான்கும் ஓரடி முதன்மடக்கு.

நிலமனிலமன்னெடுவெளிதீநீரா
யலமனலமன்னமலன்--புலனைந்தும்
வென்றார்தொழுமால்விளங்குதிருவிண்ணகர
மென்றார்க்குமுண்டோவிடர்.
(629)

இது முதலிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) நிலமனிலமன்னெடுவெளிதீநீராய்-நிலமும் வாயுவும் நிலைபெற்ற பெரிய ஆகாயமுந் தீயு நீருமாகி. அலமனலமன்னமலன் - நிறைவு பொருந்தின ஆனந்தமாக்கம்பெற்ற அழுக்கற்றவ னென்றவாறு. திணை - பாடாண். துறை - கடவுள்வாழ்த்துநகரவாழ்த்துமாம்.

மாதவனின்மாதவனின்வன்றாட்டுகளணவு
போதவண்மெய்ச்சாபமதைப்போக்கினளப்--பாதமலர்ப்
பொற்போதிப்பொற்போதிப்பூதலத்திட்டஞ்சலிப்பா
ரிற்போதமிக்கவர்யார்யார்.
(630)

இது முதலடியும் மூன்றாமடியும் முதன்மடக்கு.