பக்கம் எண் :

(சொல்லணியியலுரை)383

(இ-ள்) மாதவனில் - கௌதமபாரியையாகிய அகலிகை. மாதவனின் - திருமகள்காந்தனேநினது. வன்றாள்............... போக்கினள் - வலியதாளிற்பூழியைப் பரிசித்தகாலத்தக் கௌதமனாற் றனதுமேனிக் கெய்திய கற்படிவத்தைப்போக்கின ளாகையால். அப்பாதமலர்............... பூதலத்திட்டு - அந்தத் திருவடித்தாமரைசெய்தபொலிவையேத்திப் பொன்போலுநிறத்தை யுடையபூக்களை யிப்பூமியிலிருந் தத்திருவடிகளிற் சாத்தி. அஞ்சலிப்பாரிற் போதமிக்கவர்யார்யார் - தியானித்து வணங்குவாரினும் ஞானமிகுந்தவரில்லை யென்றவாறு.

இன் - நீக்கம். அடுக்கு, துணிவின்கண்வந்தது. மாதவனில் “மென்மைவரினேளலணனவா” மென்பதனால் லகாரந்திரிந்து னகார மாயிற்று. மாதவன் - படர்க்கைமுன்னிலையாகிய இடமயக்கத்துவந்த அண்மைவிளி. திணை - பாடாண். துறை - கடவுள்வாழ்த்து.

மறுகுமறுகுமலைவார்சடையான்விற்போன்
றிறுகுமுலைமேற்பசலையேறு--முறுதேந்
தெகிழ்மலர்ப்பாணத்தான்செருக்கடந்தமாறன்
மகிழ்மகிழ்த்தார்வேட்டாண்மனம்.
(631)

இது முதலடியும் நாலாமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) உறுதேம் - பரிமளமிகுந்ததேன். தெகிழ்மலர்............. மாறன் - வழியாநின்ற பூவாளிகளையுடையானாகிய காமனதுபோரை வென்ற காரிமாறப்பிரான். மகிழ்........... மனம் - சூடுதற்குவிரும்பின வகுளமாலிகையை விரும்பின விவளுடையமனமானது. மறுகு........... யேறும் - ஊசலாடாநிற்கும்அதுவுமன்றி, அறுகினைப்புனைந்த நீண்ட சடையான்வில்லாகிய விமவானைப்போலத் திண்ணிதாயமுலைமேற் பசலையும் பரவாநிற்கும்ஆதலா லெங்ஙன முயிர்வாழும், யாதோசெய லென்றவாறு. திணை - பெருந்திணை. துறை - கண்டுகைசோர்தல்.

ஆயிரம்பெற்றானொருமூன்றைந்துற்றானாதியர்க்கு
மேயமுதல்வனெனுமெய்வேதம்--பாய்திரைப்பா
லாழியானாழியானஞ்சிறைப்புட்பாகனெனுங்
கோழியான்கோழியான்கோ.
(632)

இது கடையிரண்டடியும் முதன்மடக்கு.