(இ-ள்) உண்மைவேதமானது, பரந்த திரையோடுங்கூடிய பாற்கடலையுஞ் சக்கிராயுதத்தையுமுடையனாகி யழகியசிறையையுடைய புட்பாகனெனுந் திருவுறையூர்மாதவனைக் கோழிக்கொடியானையும், கண்ணாயிரம் பெற்றானையும், ஒருமூன்றுபெற்றானையும், மூன்றுமைந்தும் பெற்றானையுமாதியாகவுடையார்க்கெல்லா மந்தர்யாமியாக வுள்ளேபொருந்திய முதல்வனென்றுகூறாநிற்கு மென்றவாறு. மெய்வேதங்கூறுமெனக் கூட்டுக. கோ - கண். கண்ணென்பதனை யாயிரமென்பது முதலாயவற்றிற்கு முதனிலைத்தீபகமாக்கியும், மூன்றென்பதனை மூன்று, மூன்றுமைந்து மென்னு மிரண்டிற்கு முதனிலைத் தீபகமாக்கியும், மூன்று மைந்துமென வும்மை தொக்கதாக விரித்தும் உரைக்க. கோழி - உறையூர். திணை - பாடாண். துறை - கடவுள் வாழ்த்து. சலராசிமண்மேற்றவறிழையாஞான மிலராயிலராயினுமா--மலரா னனத்தானனத்தானருட்குருகூர்மாற னெனத்தானணுகாதிடர். | (633) |
இஃ திடையிரண்டடியும் முதன்மடக்கு. (இ-ள்) தவறிழையாஞானம் - தீங்கினைப்பயவா வுண்மைஞானம். இலராயிலராயினுமா மென்பது - ஞானமில்லாதவரா யில்லின்கண்வாழ் வாரேயாயினுமாக வென்றவாறு. உம்மை - இழிவுசிறப்பும்மை. மலரானனத்தானனத்தா னென்பது - தாமரைமலர்போன்ற திருமுகமண்ட லத்தையுடையான்அன்னவாகனத்தையுடையா னென்றவாறு. அருட் குருகூர்மாறனெனத்தானணுகாதிடர் என்பது அருளொடுகூடிய திருக்குருகூர்க் காரிமாறப்பிரானென் றொருக்காற்கூறினவரிடத்துத் துன்பமென்பது சிறிதுமணுகா தென்றவாறு. எனவே யணுகுவது பேரின்ப மென்பது பயன். துறை - இதுவுமது. மாசரதந்தன்னைவழுத்தலெனுமன்பெனக்குத் தாசரதிதாசரதிதன்னாமந்--தேசுபெறப் பாடார்நினைந்திடார்பல்காலிவர்க்கெளிதோ வீடாதவீடாதன்மேல். | (634) |
இஃ திரண்டாமடியும் நான்காமடியும் முதன்மடக்கு. |