(இ-ள்) மாசரதந்தன்னை.......... தாசரதி - பரதெய்வங்களைத் துதியாது தன்னைத்துதிப்பதே ஆன்மலாபமாகிய பெரிய சதிர்ப்பாடென்றறிந்து தன்னிடத் தன்புறுதலைப் பேதையேனாகிய எனக்குந் தரப்பட்ட சதிர்ப்பாட்டையுடையவன். சாசரதிதன்னாமம் - தசரதன் பிள்ளையினது திருநாமமாகிய ராம வென்பதனை தேசுபெற.......... பல்கால் - நாவும் மனதும் விளக்கமெய்தப் பலகாலுஞ்சொல்லார், சிந்திப்பதுஞ்செய்யார். இவர்க்கெளிதோ வீடாதவீடாதன்மேல் - இவ்வறியாமையுடைய வித்தன்மையோர்க்குச் சரீரம்விட்டகாலத் தழிவில்லாத பரமபதத்தின்கட் சென்று பேரின்பமெய்துத லெளியதொன்றாகா தென்றவாறு. உம்மை இழிவுசிறப்பு. ஓகார மெதிர்மறை. துறை - இதுவுமது. இவையாறு மீரடிமுதன்மடக்கு. இனி மூவடி முதன்மடக்கு வருமாறு வேலைவேலைக்கடுவைவென்றவிழிநீர்ததும்பு மாலைமாலைப்பணிவார்வண்குருகூர்ச்--சோலைக் கயலேகயலேகவர்குருகேநீக்க முயலேமென்றார்க்கேமொழி. | (635) |
இஃ தீற்றடியொழிந் தேனைமூன்றடியும் முதன்மடக்கு. (இ-ள்) வேலினை, கடலுட்பிறந்த நஞ்சினை வென்றதாமென்று அவர் பாராட்டின விழிகளானவை துன்பநீர்துளிக்கும் மயக்கத்தினை, திருமாலடிகளைவணங்குவார் வளவிய குருகாபுரியின்கட் சோலைப்பக்கத்து நீரின்கட் கயலைப்பருகாநின்றகுருகேநின்னைவிட்டுநீங்குதல் உள்ளத்தாலும் முயலுதல்செய்யேமென்று வஞ்சமொழிகூறிப் பிரிந்தவருடன் கூறுவாயாக வென்றவாறு. பகுதி - ஒருவழித்தணத்தல். துறை - பறவையோடு பரிவுற்றுரைத்தல். போதகமுன்போதகமுன்புட்பாகன்பூங்கமல மாதகலாதெய்துமணிமார்பன்--சீத மலர்மலர்நீர்ப்பொன்னிமதிளரங்கன்பேர்கற் கலர்கலருள்வன்பாதகர். | (636) |
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதன்மடக்கு. (இ-ள்) போதகமுன்பு - கசேந்திரன்முற்காலத்து. ஓதகமுன் - மூலமேயென்றுகூறப்பட்டவாவியினிடத்தெதிர்ப்பட்ட. புட்பாகன் - கலுழவாகனன். பூங்கமல.................... மணிமார்பன் - பொலிவினையுடைய |