தாமரையா ளொருபொழுதும் நீங்காதேதழுவுங் கவுத்துவமணியொடுங் கூடிய திருமார்பினையுடையான். சீதமலர்............... பொன்னி - குளிர்ந்த மலர்கள் விரியப்பட்ட திருக்காவிரிநடுவாகிய. மதிளரங்கன் - ஏழாவாணத்தையுடைய திருவரங்கேசன். பேர்கற்கலர் கலருள் வன்பாதகர் - திருநாமத்தைக் கல்லாதவர் பாதகருள் வலியபாதகரா மென்றவாறு. திணை - பாடாண். துறை - பழிச்சினர்ப்பணிதன் முன்னோர்கூறினமையாலிது பரவார்ப்பழித்தல்கடவுள்வாழ்த்துமாம். பானலங்கண்பானலங்கண்பான்மைப்பணிமொழியாய் கானடுங்கற்கானடுங்கற்காய்சுரந்தான்--போனதினி மண்காத்தருள்பெருமான்மாநீர்வளவயல்சூழ் தண்காத்தண்காவுதுபோய்த்தான். | (637) |
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதன்மடக்கு. (இ-ள்) செங்கழுநீர்போலுங் கண்ணினையும், பாலினதினிமையை யுவமையாகக்கருதப்படும்பகுதியையுடைய மெல்லிய மொழியினையு முடையாய் நடக்குங்கா னடுங்குதல்செய்யுங் காட்டிடத்துப் பரத்தி வைத்தாற்போலு முள்வாய்ப்பரலையுடைய வெம்மையொடுங்கூடியசுரம் போனது, இனி யாஞ்செல்லாநிற்பத்தோன்றும் உது, உலகத்துயிர்களைக் காத்துக் கருணைசெய்யும் பெருமையையுடைய திருமாலது மிக்கநீரையுடைய வளப்பத்தோடுங்கூடிய வயல்கள்சூழ்ந்த தண்ணென்றசோலையையுடைய திருத்தண்காவா மென்றவாறு. செல்லாநிற்பத்தோன்றுமென்பது சொல்லெச்சம். பகுதி - உடன்போக்கு. துறை - நகர்காட்டல். கள்ளவிழ்பூங்காவுங்கடிதடமுஞ்செய்யுமல்லா தெள்ளிடையவெள்ளிடையதில்லாத--வெள்ளைக் குளத்தான்குளத்தான்குழுவளர்ப்பான்மூழிக் களத்தான்களத்தான்கலர்க்கு. | (638) |
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதன்மடக்கு. (இ-ள்) தேனையொழுக்கும் பூவினையுடையசோலையும், பரிமளிக்கும்வாவிகளும், வயலுமல்லாதே எள்ளுப்போடுதற்கு மிடத்தையுடைய வெளியென்பதில்லாத வெள்ளைக்குளமென்னுந் திருப்பதியையுடையான் |