பெயரைப் புணர்க்குங்காலு............. மூன்றே திரிபிடனொன்றே யியல்பென, வாங்கந்நான்கேமொழிபுணரியல்பே” என்பதனாலும் இவை உயிர்முதன் மெய்யீற்றுமொழி நிற்ப மெய்ம்முதன் மெய்யீற்றுமொழி வரு மொழியாய்ப் பெயரொடுபெயரைப் புணர்ப்பதாய் “வேற்றுமைமப்போய் வலிமெலியுறழ்வு, மல்வழியுயிரிடைவரினியல்பும்முள” என்பதனால் அல்வழிக்கண் ணிலைமொழியீற்று மகரம் வருமொழி முதல் யகரத்தோடு புணர்ந் தியல்பாயது. யாவையுமுறு வென்பது “புள்ளியில்லாவெல்லாமெய்யும்,.......... ஆயீரியலவுயிர்த்தலாறே” என்பதனால் அல்வழிக் கண் ணேனையுயிரோ டுருவுதிரிந்துயிர்த்தது. இது எட்டிறந்த பல வகையுட்கூட்டம். உறுபய னென்பது “மூன்றாறுருபெண்வினைத்தொகைசுட்டீ, றாகுமுகரமுன்னரியல்பாம்” என்பதனால் வினைத்தொகை வாய்பாட்டு முற்றுகரத்தின்மேல் வருபகர மியல்பாயது. பயன்விளையென்பது “ணனவல்லினம்வரட்டறவும்பிறவரி, னியல்பு மாகும்வேற்றுமைக்” கென்பதனால் வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ணிடை யினம்வர னகார மியல்பாயது. விளைப்பானென்பது “பெயரெச்ச வினையெச்ச வாய்பாடுகளும் பொருண்முடியுமாறறிந்து பகுதி விகுதியாக்கி யிடைநிலையும் வேண்டுழித் தந்துமுடிக்க” வென்பதனால் விளைக்கவேண்டி யென்னும் பொருண்மைதோன்ற விளையென்னும் பகுதியை முதல்வைத்து அதன்மேல் “என்பவும்பிறவும், வினையின்விகுதி” யென்பவற்றால் பானென்னும் விகுதியை நிறுவிப் “பவ்வமூவிடத்தைம்பாலெதிர்பொழு, திசை வினையிடைநிலை” என்பதனாற் பகரவிடைநிலையை மிகுத்து முடிக்க விளைப்பானல கென்பது “புள்ளியீற்றுமுன்னுயிர்தனித்தியலாது, மெய்யொடுஞ்சிவணுமவ்வியல்கெடுத்தே” என்பதனால் னகரவொற்றியல் பாய்நிற்க வதன்மேல் அகரமேறி முடிந்தது. இதுவுங் கூட்டம். |