பக்கம் எண் :

பாயிரவுரை41

அலகில் சோதியென எண்ணையுணர்த்தும்பெயரொடும்புணர்ந் தாகிய வென்னும் பண்புத்தொகைவாய்பாட்டான் வினையெதிர்மறுத்த பெயரெச்ச வினைக்குறிப்பு, தன்னெச்சமாகிய சோதியென்னும் பெயரொடு முடிந்தது. “கோளில்பொறியில்”, “கோட்டமில்கட்டுரை” என்பனவுமிது.

சோதியணிகிளர்திருவுரு வென்பது உவமைத்தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை யொற்றுமை நயம்பெற்று மூன்றாவதன்றொகைப் புறத் தும்மைத்தொகையுமுற் றன்மொழித்தொகைப் பெயர்ப்பயனிலை கொண்டது.

உறுபய னென்பது உரிச்சொல்லடையோடுங் கூடிய பண்புப்பெயரெனினுமாம் ; ‘நள்ளிருட்கிடந்தேன்’ என்பதுபோலும். உறுபயன் முத்தி. அணி-கௌத்துவமணி. இவை ஆகுபெயர் ; என்னை? “அவை தாந், தத்தம்பொருள்வயிற் றம்மொடுசிவணலும்” என்பதனா லறிக. இனி, “எல்லாத்தொகையுமொருசொன்னடைய” என்பதனால் இம்முத லீரடியுள் உலகம் யாவையு மென்பது இருமொழித்தொடர்த்தொகைச் சொல். உலகம் யாவையு மென்பது முதல் திருவுருவென்ப தீறாயின பன்மொழித்தொடர்த் தொகைச்சொல். அவற்றுள்ளும் அலகில் சோதி யணிகிளர்திருவுரு வென்பன அறுவகைத்தொகையு மோ ரள வடிக்கண்ணே யொருங்குதொக்கன. என்னை? அலகிலவாகிய சோதி களி னொளியைப்போலு மொளியையுடைய வணியையுந் தழையாநின்ற திருவோடுங்கூடிய திருமேனியையு முடையானெனத் தொகைதொடர்ந்து நிகழ்ந்தமையா னெனக் கொள்க. அன்றியும், விளைப்பானென்பதனை யெடுத்தலோசையால் வினைப்பெயராக்கி யிருபெயரொட்டுப்பண்புத் தொகைவாய்பாட்டான் உறுபயன் விளைப்பானாகிய திருவுருவெனினுமாம். வினைப்பெயர் முற்றாய்ப் பெயர்ப்பெயரேபோல வுருபேற்றலினெனக் கொள்க. இவ்விரண்டிற்கும் விளைப்பான்றிருவுருக் குடிபுகு வடவேங்கட மெனவும், விளைப்பானாகிய திருவுருக் குடிபுகும் வடவேங்கடமெனவும் முறையே தொடர்ப்படுத்து முடிக்க. இச்செய்யுட்குப் புலவீர்கா ளென்னுந் தோன்றாவெழுவாயை முதலேவிரித் துரைநடையொட்டுக. இவை யிரண்டுமன்றி விளைப்பான் என்பதனைப் படுத்த