பக்கம் எண் :

42பாயிரவுரை

லோசையால் வினைப்பதமாக்கி, உயிர்களெல்லா முத்தியை விளைக்கப் படுவா னென்றவ னலகில்சோதி யணிகிளர்திருவுருவெனத் தன்னெச்சமான பெயர்கொண்ட முற்றாக்குதல் இச் சிறப்புப்பாயிரஞ் செய்தார் கருத்து. இம் முற்றிற்கு அதன்பின்னர் அவன் என்னுஞ் சுட்டுப் பெய ரெஞ்சியதாக விரித்து மேல்வரும் உணர்வுயிரென்பவற்றோடும் புணர்த்து அவன்குடிபுகும் வடவேங்கடமென முடிக்க.

இம் முதலீரடிக்கு மித்துணையும் எழுத்துச் சந்தி முடிவுஞ் சொன் முடிவும் விரித்தனம். இங்ஙனம் வகுத்தவற்றுள் இம்முற்றிற்குப் பொருள்கோள் - ஆற்றுநீர். பொருள் - புறப்புறம். திணை - வாகை. துறை - அருளொடு நீங்கல். என்னை? “ஒலிகடல்வையகத்து, நலிவு கண்டுநயப்பவிந்தன்று” என்னும் வெண்பாமாலையுள் வாகைத்திணையுளிறுதிச் சூத்திரத்தா னுணர்க. யாப்பு- குறள்வெண்செந்துறை. அலங்காரம்- ஒருபொருட் கொன்றுபலகுழீஇய பல்பொருளுவமை. மெய்ப்பாடு - கல்விபற்றிய பெருமிதம். பயன் - ஆதலான் முத்திவேண்டுகில் இக்காயமிருக்கப் பெற்றபொழுதே இந்திரியங்களையடக்கி, மண் பெண் பொன் என்னும் பற்றினைவிட்டு, மனோ வாக்குக் காயங்களா லவனைச் சிந்தித்தும் வாழ்த்தியும் வணங்குமின் ; பேரின்பம் பெறலாம் என்பதாம்.

இப்பாயிரச் செய்யுண் முதலீரடியையு மிங்ஙனம் பிரித்துச் சொல்லணிக்கட்காட்டிய பிறிதுபடுபாட்டாக்கியது பஞ்சாதிகாரவிலக்கண நடைதழீஇய ஒருவகை விரித்துரைகாட்டுதற் கெனக் கொள்க. இனி ஏனையடிகட்கெல்லாம் இவ்வாறு விரித்துரைப்பி னுரைபெருகுமாதலான் அவற்றிற் கிவற்றிற் சுருங்கக்கூறுவதையுங் கற்றபெற்றி நற்குணனுடையோர் தெற்றென முற்ற வுய்த்துணர்க.

உணர்வுயிர்.......... கவின்பதிநின்று மென்பது அவன் ஆயுவும், ஞானமும்போலத் தன்னுடன் அளவளா யுத்தமராகிய நித்தர் கூட்டம் விட்டுநீங்காத அழகிய சுவணமயமாம் அந்தாமத்தின்கண்ணு மவ்வுருநிலை பெற்றிருப்பதோடும் என்றவாறு. உணர்வுயிர்-உம்மைத்தொகை. கணமகலாத வென்பதற்குக் கணப்பொழுதும் விட்டுநீங்காத வெனினுமாம். என்னை? “ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்” என்றாராகலின். நித்தர் - அநந்த கெருட சேனாதிபதிமுதலியோர். அக