லாதபொற்கவின்பதி என்பது “உருபும்வினையுமெதிர்மறுத்துரைப்பினுந், திரியாதத்தமீற்றுருபினென்ப” என்பதனால் எச்சப்பெயர் திரிபின்றி முடிந்தது. உரவுநீர்வளைத்தவொன்பானுள்.......... வடவேங்கட மென்பது கடல்சூழ்ந்த பூமியினிடத்துக் கண்டமொன்பதினுள்ளுந் தென்றிசைக்கட் பரதகண்டத்துள் அந்தாமமாகிய அப் பழம்பழி பூலோகவைகுண்டமானதென் றுயர்ந்தோர் கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் விசும்பைத் தொடவுயர்ந்த சோலையையுடைய வடக்கின்கண் வேங்கடமு மென்றவாறு. உரவுநீர் வளைத்த வொன்பானென்பது அடிப்பட்டபெய ரெஞ்சாது முதனின்று தொடர்ந்த பெயரெச்ச வாய்பாடு தன்னெச்சமான பெயர்கொண்டு முற்றியது. அடிப்பட்ட பெயரெஞ்சியதாவது உண்டசாத்தன் என்பதற்கு அமுதுண்ட சாத்தன் என்றும், உண்டவமுதென்பதற்குச் சாத்தனுண்ட வமுதென்றும் முதலே நின்ற பெயராகிய அமிர்துஞ் சாத்தனும் எஞ்சிநிற்பது. அஃதீண்டு யாண்டு விரிந்ததெனின்? உரவுநீர் அடிப்பட்டபெயர் ; வளைத்த வென்பது பெயரெச்ச வாய்பாடு ; ஒன்பான் என்றது தன்னெச்சமான பெயர். ஆதலால் உரவுநீர் வளைத்த என முதலே எஞ்சாது விரிந்தமை காண்க. இவை வினையெச்சத்திற்குமுள. அவையும் இம்முறையே காண்க. உரவுநீர் - போக்குவரவு நீர். ஒன்பானுள் என்பது “ஒன்றுமுதலாகப் பத்தூர்ந்துவரூஉ, மெல்லாவெண்ணுஞ் சொல்லுங்காலை, யானிடைவரினு மானமில்லை, யஃதென்கிளவியாவயிற்கெடுமே, யுய்தல்வேண்டும்பஃகான் மெய்யே” என்றாராகலின், அஃதென்னுஞ் சொற் கெட்டுப் பகரமெய்நிற்ப வுருபு புணர்ச்சிக்கண் ணிடை ஆன்சாரியை பெற்றது. ஒன்பானுட் டென்புல என்பது எட்டிறந்த பலவகையுட் டிரிந்ததன்றிரிபு. கண்டத்துள் என்பது “மஃகான்புள்ளிமுன்னத்தேசாரியை” என்பதனால் அத்துச்சாரியை பெற்று, “அத்தேவற்றேயாயிருமொழிமே, லொற்று மெய்கெடுதறெற்றென்றற்றே” என்பதனான் மகரங்கெட்டு “அத்தினகரமகரமுனையில்லை” என்பதனால் அத்துச்சாரியை அகரங் கெட்டது. அப்பழம்பதி என்பது “வினையெஞ்சுகிளவியு.......... சுட்டி |