பக்கம் எண் :

44பாயிரவுரை

னிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியு, ஞாங்கர்க்கிளந்தவல் லெழுத்துமிகுமே” என்பதனாற் பகரமிக்கது. வடவேங்கடம் வேற்றுமைத் தொகை.

இதன் பொழிப்புரை புலவீர்காள் உயிர்கண்முழுதும் பெறுதற்கரிய முத்தியை விளைக்கப்படுவான் எண்ணிறந்த பலகோடியவா மிள ஞாயிறுபோன் றொளியையுடைய கௌத்துவமணியையுந் தழையா நின்ற திருவோடுங்கூடிய திருமேனியையு முடையான் அவனாயுவும், ஞானமும்போலத் தன்னொடு மளவளாய வுத்தமராகிய நித்தர்கூட்டந் தனது காந்தியையுங் கருணையையுங்கண்டுங் கருத்துட்கொண்டும் விட்டு நீங்கா தழகிய சுவணமயமாகிய அந்தாமத்தின்கண்ணும், அகிலபூரணனாகி நிலைபெற்றிருப்பதோடும் கடல் சூழ்ந்த பூமியின்கண்ணவாங் கண்ட மொன்ப தென்றவற்றுள்ளும் பரதனாற்பெயர்பெற்ற கண்டத்தினுட் பழம்பதி பூலோக வைகுண்டமானதென வுயர்ந்தோர்கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் என்பதாம். அவன் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் எனக் கூட்டுக. அற்றேல் விளைப்பான்.... திருவுரு என்பது முதலாய வவற்றினிடையிடை பிறபல சொற்றொடர்ந்தவா றென்னையெனின், நன்று சொன்னாய் ! “தத்தமெச்சமொடுசிவணுங்குறிப்பி, னெச்சொல்லாயினுமிடைநிலைவரையார்” என்பதனா லிடையிடையேற்பன அடைச்சொல்லாய்வந்தன. அஃதாக இங்ஙனந்தொடர்ந்த வவற்றி னிடையிடை பெறுதற்கரியவென்பது முதலாய சொற்கள் கூட்டியுரைத்த வுரைநடை யாதோவெனின், “சொல்லொடுங்குறிப்பொடுமுடிவுகொளியற்கை, புல்லிய கிளவியெச்சமாகும்” என்றாராகலின், கூட்டியுரைக்கப்பட்டது. ஆனாற் சொல்லெச்சங்களேயன்றிக் குறிப்பெச்சமு மிதனுள்ளு முளவோவெனின், உள. அஃ தியாண்டுக்குறித்ததெனின், பரமவைகுண்டத்திருப்பவன் அவ னனைத்துலகத்துயிர்கடோறும் அந்தரியாமியாயிருப்பதோடுங் கைம்மாறின்றியு மிவ்வுலகத்துயிர்கள் பெறுதற்கரிய முத்தியை யெளிதின் விளைப்பவனாகிப் பரதகண்டத்துட் பழம்பதியெனக்குடிபுகுந்துறையும் வடவேங்கடமெனவே அவன் பரமகிருபையிருந்தபடியோவெனவும், பரமவைகுண்டத்தினுந் திருமாமணிமண்டபத்தினும் நித்தர் முத்தரோடுங்கூடிய திருவோலக்கத்திற் குறைவின்றி யிருப்பதோடும், வடவேங்கடத்தினுந் தெய்வத்திருமேனியோடுந் தொண்டக்குழாங்கள்