சதுர்பெற....... சார்பெனலாய் என்பது நால்வகைபெற்றுச் செய்யுளிடம் வழக்கிடமென்னு மீரிடந்தழுவின சார்புநூலென்பதாக வென்றவாறு. காரிதந்தருள்......... உரைத்தனன் என்பது அந்நூற்குக் காரியா ருலகின்மன்னுயிர்க ளீடேறப் பெற்றருள்செய்த நூற்கடலினியற்பெயரால் மாறனலங்கார மென வத் திருநாமத்தின் யவ்வணிக்கணியாகவே யலங்கரித்து ஞானாசாரியர் குழீஇயதாம் அவையின்கண் ணரங்கேற்றினன் என்றவாறு. சிற்குணச் சீநிவாதன்......... உணர்வோன் என்பது அவன் யாரெனில், சாத்துவிககுணத்தையுடைய சீநிவாதனென்னும் ஞானாசாரிய னினியகருணையால் நன்பொருளாகிய சித் தசித் தீச்சுரமென்னும் மூன்றினையும் உணர்த்தும் ஞானநூல்களை நாடோறும் பேரானந்த மிகும்படி யாராய்வோன் என்றவாறு. “வேண்டியகல்வியாண்டுமூன்றிறவா” தென்பதனால் உணர்வோனென நிகழ்வு மெதிர்வும் பெறக் கூறினாரென்றறிக. பெருநிலம்........ வருமனகன் என்பது பெரியவுலகினிடத் துயர்ந்தோர் கீர்த்திக்குந் திருக்குருகைப்பெருமாள் பெற்றருளும் அழுக்கற்றவன் ; புண்ணியன். என்றவாறு. செழுந்தேன், மருக்கமழ்சீரகத்தார் வணிகன் என்பது வளமையை யுடைய தேனினது பரிமளம் பரிமளிக்குஞ் சீரகத்தார்புனைந்த வணிகர் குலத்துள்ளான் என்றவாறு. புகழ்த் திருக்குருகைப்பெருமாள் கவிராயன் என்பது கீர்த்தியையையுடைய திருக்குருகைப்பெருமாள்கவிராயனென்னுஞ் சிறப்புப்பெயரை யுடையோன் என்றவாறு. அருட்குணத்துடன்வளர்சடையன் என்பது கருணைக்குணத்துடன் வளராநின்ற சடையன் என்னு மியற்பெயருடையோன் என்பதாம். |