பக்கம் எண் :

48பாயிரவுரை

லின். இவ்வாசிரியப்பா முதலீரடியையுங் குறள்வெண்செந்துறை யாக்குதலாற் சொல்லணியுட் சித்திரப்பாவினுட் பிறிதுபடுபாட்டாயது.

64. பாவிற்கணிபோற்பனுவற்றெளிவுணர்ந்தோர்
நாவிற்குவாய்மைபோனாரணனாந்-தேவிற்கு
வாய்ந்தவருள்போலவாய்ந்ததேநூலகத்தா
யேய்ந்தபொருட்பாயிரம்.

(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது சிறப்பிற் குவமையுணர்ற்று.

இதனுள், வாய்மை - சத்தியவசனம். கற்றகல்வியைப் பிறர்க்குச் செலச்சொல்லுதலுமாம். நூலகத்தா யேய்ந்தபொருட்பாயிரம் என்பதனாற் சிறப்புப்பாயிரம். நூலகத்தா யேய்ந்தபொருள் புலவன்கூறிய வவ்வவ நூலுக்குச் சிறந்தபொருள்களா மெனவுணர்க.

(64)

பாயிரவுரை முற்றும்

--------------

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.