பக்கம் எண் :

  

ஸ்ரீ :

மாறனலங்காரம்

முதலாவது

பொதுவியலுரை

65. திருப்பாவையென்னத்திருந்தியற்பாத்தந்த
திருப்பாவைவில்லிபுத்தூர்ச்செல்வி-யருட்பார்வை
வாய்ந்ததனாற்செய்யுள்வழக்கென்றிரண்டிடத்தா
லாய்ந்துரைப்பல்செய்யுளணி.

என்பது சூத்திரம். இவ் வதிகார மென்னுதலிய வெடுத்துக்கொள்ளப் பட்டதோவெனின், அதிகார நுதலியதூஉ முன்னர்க்கூறிப்போந்த சிறப்புப்பாயிரத்தானே யுணரப்படும். என்னை? “தனாதுநுண்ணுணர் வாற்றருபலவணியையும்” என்பதனாலுணர்க. ஆயின், இவ் வணியதிகாரத்து ளணியிலக்கண மெனைவகையோத்தினானுணர்த்தினாரோ வெனின், இனைவகையோத்தினா னுணர்த்தினா ரென்பதூஉம் அச்சிறப்புப் பாயிரத்தானே விளங்கும். என்னை? “பொதுவியல்பொருள்சொல்லணி யெச்சவியலென” எனக் கூறியதனாலுணர்க. அஃதாக, இவ் வதிகாரத்தின் முதற்கணோத்தினைப் பொதுவிய லென்ற தென்னையெனின், அணி பெறுஞ் செய்யுள்கட்கும், பொதுவான வொருசாரணிக்கும் பொதுவிலக்கண முணர்த்தினமையாற் பொதுவியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வோத்தினு ளிச்சூத்திர மென்னுதயில்றோவெனின், ஒருசாராசிரியர் வேண்டுஞ் சிறப்புப்பாயிரமுணர்-ற்று. என்னை? “தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளு, மெய்தவுரைப்பதுந்தற்சிறப்பாகும்.” என முன்னையோர் கூறிய முறையானும், “கடவுள்வணக்கமுங்கருதியபொருளுந், திடனுறப்புகல்வதுஞ்சிறப்பென்றாகும்.” என இந் நூலுடையாருங் கூறிய முறையானு முணர்க. உம்மை இறந்தது தழீஇயிற்று. அன்னவாறாத