லிச்சூத்திரத்திற்குப் பொருளுரைப்பவே விளங்கும். ஆனா லிச் சூத்திரச் சொற்பொருள் யாதோவெனின், அப் பொருளுரை நான்குவகைப்படும் ; கருத்துரைத்தலும், கண்ணழித்துரைத்தலும், பொழிப்புத்திரட்டலும், அகலங்கூறலும் என. என்னை? “உட்கோள்கண்ணழிப்புடன்பொழிப் பகலஞ், சுட்டிக்கூறல்சூத்திரச்சொற்குரை” எனவரும். அவற்றுள்ளும், கருத்துரைத்தலாவது சூத்திரத்தினுட்கோளுரைத்தல். என்னை? “கருத்துரை சூத்திரத்துதிரட்கோள்கழறல்” எனவும், கண்ணழித்துரைத்தலாவது சூத்திரத்திற் சொற்றொறுஞ் சொற்பொருளுரைத்தல். என்னை? “தொகுத்தசொற்றொறுஞ்சொற்பொருளுணர்த்த, லடுத்த கண்ணழிப்பென்பர்கற்றவரே’ எனவும், பொழிப்புத்திரட்டலாவது சூத்திரத்திற் பொருளையெல்லாந் தொகுத்துரைத்தல். என்னை? “ஒலிகெழுசொற் பொருள்களைத் தொகுத்தொருங்கே, பொலிவுறத் திரட்டியுரைப்பது பொழிப்பே” எனவும், அகலமாவது சூத்திரத்திற் பொருளைச் செம்மை செய்தற்குக் கடாவும் விடையு முள்ளுறுத்தி விரித்தல். என்னை? “மனாது றும்யாப்பின்மரீஇயசொற்பொருளை, வினாவினும்விடையினும் விழுப்பொருளாக்கி, யகற்றுபுவிரித்துரைப்பதுவேயகலம்” எனவும் இந் நூலுடையார் கூறிய சூத்திரங்களானு முணர்க. இவ்வகையெல்லா மிச்சூத்திரத்தினுட் பெறுமுறை யெங்ஙனேயோ வெனின், “திருப்பாவை........ யருட்பார்வைவாய்ந்தனா” லெனவே கடவுள்வணக்கஞ் சொன்னவாறு. “செய்யுளணி” யெனவே அதிகாரத்துட் கருதியது சொன்னவாறு. அதிகாரம்-முறைமை. இதனாற் கருத்துரை முற்கூறப்பட்டது. இனிக் கண்ணழித்துரைக்குமாறு :- திருப்பாவையென்ன வென்பது அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக என்றவாறு. திருந்தியற் பாத்தந்த வென்பது நிரம்பிய இலக்கணத்தையுடைய பாட்டை யுலக மீடேறப் பாடித்தந்த என்றவாறு. திருப்பாவை வில்லிபுத்தூர்ச்செல்வி யென்பது திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர்த் திருவுடையாள் என்றவாறு. அருட்பார்வை வாய்ந்ததனா லென்பது அவளது கருணையோடுங் கூடிய திருக்கண்ணோக்கம் எனக்கே பலித்ததனால் என்றவாறு. செய்யுள் வழக்கென் றிரண்டிடத்தா லென் |