பது செய்யுளென்றும், வழக்கென்றுஞ் சொல்லப்பட்ட இரண்டிடங்களானு மென்றவாறு. ஆய்ந்துரைப்பல் செய்யுளணி யென்பது (செய்யுளணி யாய்ந்துரைப்பலெனப் பாடமாற்றி) முன்னோர்கூறிய செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு. அணியென்ப தீண்டணியிலக்கணங்களை. செய்யுட் கழகு கொடுத்தலின் அணியென்றாயிற்று. இனிப் பொழிப்புத் திரட்டுமாறு :- அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக நிரம்பிய இலக்கணத்தையுடைய பாட்டை யுலக மீடேறப் பாடித்தந்த திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூர்த் திருவுடையாளது பரம கருணையோடுங் கூடிய திருக்கணோக்கஞ் சிறிது மறிவிலனா மெனக்கே பலித்ததனாற் செய்யுளென்றும் வழக்கென்றுங் கூறிய விரண்டிடங்களாலு முன்னோர்கூறிய செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு. இனி, அகலமாவது விரித்துரையாதலால் இதற்கும் விரித்துரை யீண்டுக்கூறின் உரைபெருகுமாதலா லதனை யுள்ளுறுத் துய்த்துணர்ந்துகொள்க. அஃதாக ; முன்னோர்கூறிய இலக்கண நூல்க ளெனை வகையோத்தினானுணர்த்தினாரெனினு முற்று மொருபாவினாற் கூறவும், இந்நூலுடையார் பொதுவியலொன்றையும் வெண்பாவாற்கூறி யேனை யியல்கண் மூன்றினையும் ஆசிரியத்தாற்கூறிய தென்னையோவெனின், நன்றுசொன்னாய் ! இக் கடாவிற்கு, எதிரது போற்றலென்னு முத்தியாற் பாயிரத்துள், “விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு, மதியாலுரைத்ததும் வழங்கன்ஞாபகமா” எனக்கூறிய சூத்திரத்தா னுணர்க. (1) 66. | வெண்பாவகவல்விரிகலிப்பாவஞ்சிப்பா பண்பார்மருட்பாபரிபாட-லொண்பா வினமென்றாலித்திரண்டாறீராறவாய்ச்சென் றனமுந்து நூல்கற்றது. |
(எ-ன்) முன்னர்ச் செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கண முரைப்பலென்றார்; செய்யுளுணர்ந்தே அணி யுணரப்படுமாகலான், அணிபெறுஞ்செய்யுளின் பெயரும், முறையும், தொகையு முணர்-ற்று. |