பக்கம் எண் :

52மாறனலங்காரம்

(இ-ள்) செய்யுளெனத் தொகையா னொன்றாய்நின்ற அது, வெண்பா அகவல் என வகைவரையறை யிரண்டாய் அவற்றின் மரபு மிக்க கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என நான்கினோடும் விரிவரையறை யாறாய்ச் செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்ற வோசை யுடைத்தாய் விரியொடுநின்ற வாறனுள் வெண்பா முதலாய நான்கென்னு மொள்ளிய பா இன மெனப் பன்னிரண்டாய் முந்துநூல் கூறப்பட்டு நிகழ்ந்தன வென்றவாறு.

என்றென்பது எண்ணிடைச்சொல். அதனைப் பா, பாவின மென்னு மெல்லாவற்றினும் பிரித் தேற்றுக. என்னை? “என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்ப வாசலின். அது “வினைபகையென்றிரண்டினெச்ச” மென்பதுபோலக் கொள்க. இரண்டாறீராறென்பன நிரனிறை. ஆயென்ப திறுதிவிளக்கா யீண் டாக்கத்தினைக் காட்டியது. ஒலித்தாயென்ப துடைமைவினைக் குறிப்பு. “மருட்பாவேனையிருசாரல்லது, தானிதுவென்னுந் தனிநிலையின்றே” என்பதனால் அதற்குச் செப்பலும் அகவலுங் கொள்க. “பரிபாடல்லேதொகைநிலைவிரியி, னிதுபாவென்னுமியனெறியின்றிப், பொதுவாய்நிற்றற்குமுரித்தெனமொழிப” என்பதனால் அதற்கு முழுதுமிசையாய்க்கொள்க. இப்பெயர் பெயர் ; இம்முறை முறை ; இத்தொகை தொகை எனக் கொள்க. இவற்றுள் வெண்பா முதல்வைத்தது தலைதடுமாற்றமெனினுமாம். ஆயின் முதலே யணியிலக்கணங் கூறுவலெனப்புகுந் தீண்டுச் செய்யுளிலக்கணங்கூறிய முறையான் மற்றொன்று விரித்தலென்னுங் குற்றமாமெனின், ஆகாது. என்னை? எழுத் தசை சீர் தளை யடி தொடை யென்னு மாறுறுப்பின திலக்கணங்களைக் கூறி யவற்றானாய பாவினைத் தளையானும், அடியானும், தொடையானும், ஓசையானும், பொருளானும் வேறுபட்டமைகூறி யினங்களையு மவ்வகையே கூறா திவ ரீண்டைக்கே வேண்டுஞ் செய்யுட்களது தொகை வகைமாத்திரமே கூறினமையா னெனக் கொள்க.

(2)

67. ஆற்றலணிக்கண்ணவைமுத்தகங்குளகந்
தோற்றுந்தொகையேதொடர்நிலையென்-றேற்புடைய